×
 

திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.... வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல் ...!

திருப்பத்தூர் அருகே திமுக ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு வீடு புகுந்து சரமாரி அரிவாள் வெட்டு

திருப்பத்தூர் அருகே  திமுக துணைத்தலைவரை மர்ம நபர்கள் வீடு புகுந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியனூர் கோ.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (50) ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் மற்றும் திமுக துணை தலைவராகவும் உள்ளார். அவருடைய மனைவி வசந்தி (40) ஆகிய இருவரும் நேற்று வீட்டிலிருந்தபோது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீட்டில் உள்ளே புகுந்து திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் சராமாறியாக வெட்டி உள்ளனர்.

இதனால் இருவரும் கத்தி கதறி உள்ளனர் இதனால் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரும் போது அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதையும் படிங்க: கட்சி தொடங்கியதுமே ஆட்சியைப் பிடிப்போம்... முதல்வராவோம் என்பதா..? விஜய்யை மறைமுகமாக அட்டாக் செய்த முதல்வர்.!

இதனிடையே, வீட்டிலேயே வசந்தி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருப்பதி போராடி இருந்த நிலையில் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சையாக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளதும், இது தொடர்பாக கடந்த இரண்டு நாட்களாக பிரச்சனை இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலத்திலிருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என திருப்பதி கேட்டு வந்த நிலையில் இன்று அதற்கான  ரிஜிஸ்ட்ரேஷன் நடக்கவிருந்துள்ளது. இதனிடையே, இன்று மர்ம நபர்களால் திருப்பதி மற்றும் அவருடைய மனைவியை வெட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் நிலப் பிரச்சனை சம்பந்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? மேலும் குற்றவாளிகள் யார் என்று? போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'பாஜகவை வளரவிட்டு வேடிக்கைப் பார்க்கிறதா திமுக அரசு..?' கொதிக்கும் சீமான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share