திமுகவினரின் கண்ணை குத்தும் அண்ணாமலை... தமிழ்த்தாய் வாழ்த்து எங்கே என விளாசல்..!
தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டு உள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்?
இந்தி மாத நிறைவு விழாவில் டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது அப்போது விவாதப் பொருளானது.
இதுகுறித்து உடனே அரசாணை வெளியிட்ட தமிழக அரசு ''கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்து பொது நிகழ்ச்சிகளிலும் கட்டாயம் தமிழ்த்தாய் பாடப்பட வேண்டும்.தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது'' என உத்தரவிட்டார் மு.க.ஸ்டாலின்.
ஆனால், மு.க.ஸ்டாலினின் உத்தரவை திமுக அமைச்சர்களே காற்றில் பறக்கவிட்டிருப்பதை இப்போது பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சர்ச்சையாக்கி வருகின்றன. திருவள்ளூரில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் தலைமையில் நடைபெற்ற வேளாண்மை நிதிநிலை அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. 8 மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கருத்துக்கேட்பு கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமலே நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: நாங்க பி.எச்.டி. தம்பி... நீ LKG விஜய்க்கு பதிலடி கொடுத்த சேகர் பாபு...!
தமிழ்த்தாய் வாழ்த்தை வைத்து ஆளுநருக்கு எதிராக அடிக்கடி முழங்கி வரும் திமுகவினரின் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பை கையில் எடுத்துள்ளது பாஜக. இந்தவிவகாரத்தில் திமுகவினரின் விரலை எடுத்தே அவர்கள் கண்ணை குத்தி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
இதுகுறித்து அவர், ''திருவள்ளூரில், திமுக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொன்முடி, நாசர் மற்றும் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படாமல் தொடங்கப்பட்டுள்ளது சட்டவிரோதமானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இரண்டு மொழிக் கொள்கை என்ற பெயரில், தமிழகத்தில் தமிழ் மொழியே இல்லாத தனியார் பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்கி, தாய்மொழிக் கல்வியைக் கட்டாயமாக்கும் புதிய கல்வித் திட்டத்தைத் தங்கள் சுயலாபத்திற்காக எதிர்த்து, நாளொரு நாடகம் நடத்திக் கொண்டிருக்கும் திமுக, தமிழ் மொழியை வியாபாரமாகவும், அரசியல் செய்யவும் மட்டுமே, தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
தனது அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் அவமதிக்கப்பட்டுள்ளதற்கு, புதியதாக என்ன நாடகம் அரங்கேற்றப் போகிறார் முதலமைச்சர்?'' எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: Work from Home கட்சி..! விஜய்க்கு கடைசிவரை வீடுதான்.. திமுகவிற்கு முட்டுக்கொடுத்த கி.வீரமணி..!