கார் ரேஸிங்கில் வெற்றி வாகை சூடிய அஜித்தின் Unseen போட்டோஸ்!
துபாயில் நடந்த 24 மணி நேர கார் ரேஸில் கலந்து கொண்டு, வெற்றி வாகை சூடிய நடிகர் அஜித்தின் அன்சீன் புகைப்படங்கள் இதோ..
30 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் சினிமாவில் தலைசிறந்த நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் அஜித்.
நடிகர் என்பதை தாண்டி, கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கி சுடுதல், போட்டோ கிராபி, சமையல், ஏரோ மாடலிங், என தனக்கான திறமையை மற்ற துறையிலும் மெருகேற்றிக் கொண்ட அஜித் தற்போது கார் ரேசிங் அணியின் தலைவராக மாறி உள்ளார்.
இதையும் படிங்க: 45 வயதிலும் ஒர்க் அவுட்டில் மிரட்டும் அஜித் பட நாயகி மாளவிகா!
ரேஸிங் என பெயரிடப்பட்டுள்ள இவரது அணியில், அஜித் உட்பட மொத்தம் 5 கார் ரேஸ் வீரர்கள் உள்ளனர்.
நேற்று துபாயில் தொடங்கிய 24 ஹெச் கார் ரேஸ் 991 பிரிவில் அஜித்குமாரின் அணி களம் இறங்கியது.
24 மணி நேரம் நடக்கும் இந்த கார் ரேஸ் போட்டியில், அதிக தூரத்தை கடக்கும் அணியே வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் இருந்து அஜித் கடைசி நேரத்தில் விலகுவதாக அறிவித்தது... அஜித்தின் கார் ரேஸை எதிர்பார்த்து காத்திருந்த, ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது குறித்து அஜித் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு 24 ஹெச் கார் ரேசிங்கில் கலந்துகொள்ள, அஜித் பயிற்சி மேற்கொண்டபோது இவருடைய கார் சிறு விபத்தில் சிக்கியது .இந்த விபத்தில் அஜித்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றாலும், அணியின் நலன் கருதி அஜித் இந்த ரேஸில் இருந்து பின்வாங்கியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் மீண்டும் அஜித் கார் ரேஸில் களம் இறங்கினார். இதைத்தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியின் முடிவுகள், இன்று வெளியானது.
அதில் அஜித்தின் ரேசிங் அணி மூன்றாவது இடம் பிடித்து வெற்றி வாகை சூட்டியுள்ளது. இந்த தகவலை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா தன்னுடைய எக்ஸ் தலை பக்கத்தில் தெரிவித்த நிலையில், அஜித்தின் ஒட்டுமொத்த ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, விஜய் ரசிகர்களும் தற்போது இந்திய நாட்டை பெருமைப்படுத்திய அஜித்துக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் வெற்றியை நேரில் பார்க்க அஜித்தின் மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் ஆகியோர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
அதேபோல் அஜித்தின் துபாய் ரசிகர்கள் மற்றும் குட் பேட் அக்லீ படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரும் இந்த கார் ரேஸில் பார்வையாளர்களாக இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய நாட்டை பெருமைப்படுத்திய அஜித்தின் கார் ரேஸ் குறித்த சில அன்சீன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: 40 வயசுலயும் 20 வயசு பீலிங்! மாடர்ன் ட்ரெஸில் த்ரிஷா கொடுத்த முரட்டு போஸ்!