எப்படிப்பா உங்கப்பன உறிச்சி வச்ச மாதிரி ஆட்சி செய்கிறாய்..? என ஸ்டாலினிடம் கேட்டேன்.! சைதாப்பேட்டையில் துரைமுருகன் அதிர்ச்சி பேச்சு..!
அகில இந்திய அளவிலேயே பல வியூகங்கள் வகுத்து சொல்லி அடிக்கும் தலைவராக தளபதி ஸ்டாலின் விளங்குகிறார் என துரைமுருகன் கூறியுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக பொதுக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய துரைமுருகன் அதிமுக மட்டுமே நமக்கு இணையான எதிர்க் கட்சி என தெரிவித்தார். மற்றதெல்லாம் சிறு கூட்டம் எனவும் நக்கல் அடித்தார். தன்னை நல்ல பேச்சாளராக வளர்த்தது இந்த சைதாப்பேட்டை தொகுதி தான். சைதாப்பேட்டையில் திமுக கட்சியை வளர்த்தவர்கள் எல்லாம் எனக்கு நன்கு தெரிந்தவர்கள், திமுகவின் கட்சி முன்னோடிகள் அனைவரது பெயரையும் சொல்லி துரைமுருகன் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தார்.
சைதாப்பேட்டையில் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்கள் எல்லாம் பேரும் புகழோடும் வாழ்ந்தவர்கள் ஆவர், கோட்டூர்புரத்தை உருவாக்கிய ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் சைதாப்பேட்டை தொகுதியில் வாழ்ந்த எனது நண்பர்கள் ஆவர் என துரைமுருகன் பேசினார்.
இதையும் படிங்க: கடும் வறுமை... கரண்ட் பில் கட்ட கூட காசு இல்லை...! உருக்கமாக பேசிய அமைச்சர் துரைமுருகன்..!
என்னையும் ஜெகத்ரட்சகனை விட கெட்டிக்காரர் மா.சுப்பிரமணியன், ஒரு மாவட்ட கழக செயலாளர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாக இருப்பவர்தான் நமது மா.சுப்பிரமணியன். என்னுடைய பரிந்துரைகளை அவர் சரிவர செய்வதில்லை, அதிகமான பரிந்துரைகள் செய்ய வரும் கடிதங்கள் வேண்டுகோள்கள் மருத்துவத்துறையில் தான் எனக்கு வருகிறது.
மாவட்டத்தையும் அற்புதமாக வழிநடத்தி அந்த இலக்காவும் மிகவும் கடினமான இலாக்கா அதையும் சரிவர செய்து வருகிறார் அமைச்சர் மா சுப்பிரமணியன் என புகழாரம் சூட்டினார்.
அகில இந்திய அளவிலேயே பல வியூகங்கள் வகுத்து சொல்லி அடிக்கும் தலைவராக தளபதி ஸ்டாலின் விளங்குகிறார் என துரைமுருகன் கூறினார்.
ஆட்சி முறையை பொறுத்தவரை ஸ்டாலின், நாம் எதிர்பார்த்ததை விட ஏன்? எதிரிகள் எதிர்பார்த்ததை விட ஏன்? பிரதமரே எதிர்பார்த்ததை விட மிக அற்புதமாக செய்து வருகிறார். மக்களிடையே சலசலப்பு இல்லாமல் ஆட்சி செய்ய வேண்டும் அதையும் சிறப்பாக சலசலப்பு இல்லாமல் செய்து வருகிறார் ஸ்டாலின்.
நானே ஸ்டாலினிடம் கேட்டேன் எப்படிப்பா உங்கப்பன உறிச்சி வச்ச மாதிரி ஆட்சி செய்கிறாய் எனக் கேட்டேன். அதனால் அவர் இன்னும் ஒரு 25 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
டெய்லி வருது பாருங்க சின்ன சின்ன கட்சிகள் அவர் வந்தார் இவர் வந்தார் என, அதெல்லாம் திருவிழாவில் வரும் வான வேடிக்கை போன்று முடிஞ்சு போச்சு, நம்முடையது கட்சி.. அவர்களுடையது கூட்டம், அதனால் அவர்களைப் பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை.
தேர்தல் வர வர அனைத்து கட்சிகளும் கரைந்து போய்விடும் நம்மை எதிர்க்கும் கட்சி அதிமுக மட்டும் தான். அதிமுக எவ்வளவு கட்சிகளோடு வந்தாலும் எதிர்க்கும் சக்தி உண்டு மீண்டும் தளபதி தான் ஆட்சி அமைப்பார் என துரைமுருகன் தெரிவித்தார்.
என்னதான் உரிமை இருந்தாலும், எவ்வளவுதான் சகஜமான நபராக பேசக்கூடியவராக இருந்தாலும், பொதுவெளியில் உங்கப்பன், எங்கப்பன் என்கிற வார்த்தைகளை தவிர்த்து இருக்கலாம் என்கின்றனர் திமுக கட்சித் தொண்டர்கள்
இதையும் படிங்க: திமுக மாவட்டச் செயலாளர்கள் மாற்றம்- துரைமுருகன் அதிரடி அறிவிப்பு..!