×
 

துரைமுருகன் மகன் கல்லூரியில் கட்டுக்கட்டாய் பணம் பறிமுதல்; வெளியானது ED ரெய்டு விவரங்கள் - அதிர்ச்சியில் திமுக! 

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்குச் சொந்தமான கல்லூரியில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. 

திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திற்குச் சொந்தமான கல்லூரியில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்ததாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. 


அமலாக்கத்துறையிடம் வசமாக சிக்கிய கதிர் ஆனந்த்: 

ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் வேலூர் எம்.பி. கதிர் ஆனந்திற்குச் சொந்தமான வீடு மற்றும் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையில் என்னென்ன சிக்கின என்பது குறித்த முழு விவரத்தை அமலாக்கத்துறை வெளியிட்டுள்ளது. 

காட்பாடியில் அமைந்துள்ள எம்.பி. கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி மற்றும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 நாட்கள் சோதனையில் ஈடுபட்டனர். இவருக்குச் சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் 13.7 கோடி ரூபாய் ரொக்கமும், காட்பாடியில் உள்ள அவரது வீட்டில் இருந்த லாக்கரை உடைத்து சோதனையிட்டதில் 75 லட்சம் ரூபாய் பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரியில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் ஹார்ட்டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவரது வீட்டில் இருந்து ஏராளமான சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கதிர் ஆனந்தின் ஒட்டுமொத்த சொத்து விவரங்களை திரட்டி வருவதாகவும், அந்த பணி நிறைவடைந்ததும் அவரிடம் முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ஜனவரி 4ம் தேதி நடந்தது என்ன? 

புத்தாண்டின் முதல் தொடக்கமாக கடந்த ஜனவரி 4ம் தேதி
 திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் வீடு, அவரது மகனும் வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்தின் கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி  உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். 

வேலூர் அருகேயுள்ள காட்பாடி காந்தி நகரில் அமைந்துள்ளது. இதே வீட்டில் அவரது மகனும் வேலூர் மக்களவைத் தொகுதி திமுக எம்.பி-யான கதிர் ஆனந்தும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று காலை  துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்திற்கு சொந்தமான கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அதேபோல் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் மற்றும் அவரது உறவினர் தாமோதரன் வீடுகளிலும் நேற்று காலை சோதனை நடத்தப்பட்டது. கிட்டத்தட்ட இந்த சோதனை 2 தினங்களுக்கு நீடித்த நிலையில், 3வது முறையாக கிங்ஸ்டன் பொறியல் கல்லூரியில் மட்டும் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். 

அந்த சோதனையின் போது கதிர் ஆனந்தின் கல்லூரியில் இருந்து முக்கிய ஆவணங்களும், கட்டுக்கட்டாய் பணமும் சிக்கியதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

ரெய்டின் பின்னணி என்ன? 

கடந்த மக்களவை தேர்தலின் போது வேலூர் தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். அப்போது வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. முதலில் கதிர் ஆனந்த் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டப்படாத 10 லட்சம் ரூபாய் சிக்கியது.  இதனையடுத்து துரைமுருகன் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.

அப்போது பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் கட்டுக்கட்டாக 11 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து வேலூர் தொகுதிக்கு முதலில் தேர்தல் நிறுத்தப்பட்டு, மீண்டும் தேர்தல் தொடங்கியது. 2019ம் ஆண்டு வருமான வரித்துறை பதிவு செய்த ஆவணங்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்கை பதிவு செய்திருந்தது. அந்த வழக்கை அடிப்படையாக கொண்டே நேற்று துரைமுருகனின் வீடு, கதிர் ஆனந்தின் பொறியியல் கல்லூரி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் வீடுகளை அமலாக்கத்துறை சோதனையிட்டுள்ளது. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share