×
 

செங்கோட்டையனிடம் சரணடைந்த எடப்பாடி பழனிசாமி... 'அனுபவம்' கற்றுத்தந்த பாடம்..!

அந்தியூர் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் புகைப்படங்கள் ஒரே அளவு அச்சிடப்பட்டு பொதுக்கூட்ட  மேடையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

அந்தியூர் பொதுக்கூட்டத்திலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் புகைப்படங்கள் ஒரே அளவு அச்சிடப்பட்டு பொதுக்கூட்ட  மேடையில் பேனர் வைக்கப்பட்டுள்ளது. 

எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த முன்னாள் அமைச்சர் ஏ.கே.செங்கோட்டையன், ஞாயிறு அன்று அன்னூரில் நடைபெற்ற அத்திக்கடவு அவினாசி திட்ட குழு பாராட்டு விழாவை புறக்கணித்தது அதிமுகவில் புயலைக் கிளப்பியது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி வசமுள்ள அதிமுகவை செங்கோட்டையனை வைத்து கூட்டணியில் இணைக்க பாஜக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே, கோபிசெட்டிபாளையம் அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்  ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. 

ஆனால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையன் அப்படி எல்லாம் எந்த ஆலோசனை கூட்டமும் நடக்கவில்லை என மறுத்தார். இதனையடுத்து செங்கோட்டையன் வீட்டின் முன்பு குவிந்திருந்த அதிமுக நிர்வாகிகள் வீட்டை விட்டு வெளியேறினர். அதிமுகவில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே பயணித்து வரும் செங்கோட்டையனுக்கு மவுசு அதிகம். குறிப்பாக ஈரோட்டில் செங்கோட்டையன் மிகவும் முக்கியமானவராக அதிமுகவினரால் பார்க்கப்படுகிறார். 

இதையும் படிங்க: ஒன்றுபட்டால் வாழ்வு... இல்லையென்றால் தாழ்வு... எடப்பாடியை எச்சரித்த ஒபிஎஸ் ...!

இதை நன்றாக தெரிந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை எப்படியாவது சமாதானப்படுத்துங்கள் என மூத்த நிர்வாகிகள் சிலருக்கு உத்தரவிட்டதாகவும், அவர்களுக்கு சமாதானத்திற்கான வேலைகளி தீவிரமாக இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. இதற்கிடையே, தன் அளவிற்கு கட்சிக்கு மூத்த நிர்வாகியான செங்கோட்டையனும் முக்கியமானவர் என்பதை நிரூபிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரமான சம்பவம் ஒன்றைச் செய்துள்ளார். 

இன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணியில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கென‌ அமைக்கப்பட்ட மேடையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் புகைப்படங்கள் ஒரே அளவு அச்சிடப்பட்டு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி புகைப்படம் மற்றும் புகைப்படம் ஒரே அளவு அச்சிடப்பட்டு பொதுக்கூட்ட மேடையில் வைக்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது .

இதையும் படிங்க: 'எடப்பாடி பழனிச்சாமி இல்லாத அதிமுக...' ட்விஸ்ட் வைக்கும் டி.டி.வி.தினகரன்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share