சீமானை விடாமல் விரட்டும் பெரியார் மண்... சாட்டை துரைமுருகன், சீதாலட்சுமி உட்பட 7 பேருக்கு ஆப்பு!
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தேர்தலில் நடத்தை விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு முனிசிபல்சத்திரம் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி நாம் தமிழர் கட்சி பரப்புரை கூட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட 7பேர் மீது ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று மாலை, முனிசிபல்சத்திரம் பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி ஆதரித்து தெருமுனை கூட்டத்திற்கு அனுமதி பெற்றிருந்தனர். ஆனால் தேர்தல் விதிகளை மீறி மேடை அமைத்து பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியைத் தடை செய்ய வேண்டும்... தேர்தல் ஆணையத்துக்குப் பறந்த மனு..!
இதுகுறித்து பறக்கும் படை அதிகாரி ஜெகநாதன் அறிவுறுத்தியும், அவரை பணி செய்ய விடாமல் பரப்புரை கூட்டத்தை தொடர்ந்து நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து, பறக்கும்படை அதிகாரி, அளித்த புகாரின் பேரில் சீமான் உள்ளிட்ட 7 நபர்கள் மீது 189(2),126(2),174,132 BNS ஆகிய நான்கு பிரிவுகளில் தெற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த 24.ம் தேதி முதல் சீமான் பங்கேற்றுள்ள நிலையில், அவர் மீது ஏற்கனவே தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக 5 வழக்குகளும், வன்முறை தூண்டும் வகையில் பேசியதாக நேற்று குற்ற வழக்கும் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: “கொஞ்ச நஞ்சா பேச்சா பேசுன” - சைலண்ட்டாக சீமான் ஜோலியை முடித்த பெரியார் அம்பேத்கர் கூட்டமைப்பு - நாதகவிற்கு அடுத்த ஆப்பு!