போலீஸ் ஸ்டேசனில் பெண் போலீசிடம் அத்துமீறல்.. ஆபாச படத்தை போட்டு காமித்து போதையில் சப்-இன்ஸ் அராஜகம்..!
போலீஸ் ஸ்டேஷனில் இரவு பணியில் இருந்த பெண் சப்-இன்ஸ்பெக்டருக்கு போதையில் ஆபாச படங்களை போட்டு காண்பித்து, போதையில் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகளவில் வெளிச்சம் பெற்று வருகின்றன. சிறுமிகள் துவங்கி பல தரப்பட்ட பெண்களுக்கும் இதுமாதிரியான தொந்தரவுகள் தினமும் நடக்கிறது. போதையில் பாதைமாறும் சிலர், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் புழக்கம், போதைப்பொருள் நுகர்வு கலாச்சாரம் போன்றவை பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.
இத்தகைய சூழலில் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டிய காவலர்களும் சில சமயம் போதை ஆசாமிகளால் பாலியல் தொல்லைக்கு ஆட்படுவது நடந்தேறி உள்ளது. அதிலும் போதை தலைக்கேறி, காவல் பொறுப்பில் இருந்த ஒரு சப்- இன்ஸ்பெக்டர் சக பெண் சப் இன்ஸ்பெக்டரிடம் அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் மகோரா போலீஸ் நிலையத்தில் பணி புரிந்து வந்தவர் சப்-இன்ஸ்பெக்டர் மோகித் ராணா. அதே போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரும் பணி புரிந்து வந்துள்ளார். இருவருக்கும் ஒரே நாளில் இரவுப்பணி வழங்கப்பட்டுள்ளது. பெண் சப்-இன்ஸ்பெக்டர் வழக்கம் போல தனது பணிகளை பார்த்து வந்துள்ளார். ஆனால் இரவு பணிக்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மோகித் ராணா, மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மித மிஞ்சிய மது போதையில் என்ன செய்கிறோம் என்றே தெரியாத அளவில் மோகித் ராணா நடந்து கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: யூடியூப் பார்த்து தனக்கு தானே ஆபரேஷன் செய்து கொண்ட இளைஞர்.. தையலை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்..!
இரவில் காவலர்கள் அதிகம் இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மோகித் ராணா, பெண் சப்-இன்ஸ்பெக்டரிடம் நைசாக பேச்சு கொடுத்துள்ளார். அதன் பின், தனது போனில் அவர் பதிவேற்றி வைத்திருந்த ஆபாச புகைப்படங்களையு, ஆபாச வீடியோக்களையும் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளார். சக அதிகாரி என்பதால் எதிர்த்து பேசி சண்டையிட விரும்பாத அந்த பெண் சப்-இன்ஸ்பெக்டர், அவ்விடத்தை விட்டு சென்றுவிட முடிவெடுத்தார். இதனால் தனக்கென ஒதுக்கப்பட்ட தனி அறைக்கு சென்று அமர்ந்துள்ளார். அதை தவறாக புரிந்து கொண்ட மோகித் ராணா, அங்கு சென்றது மட்டுமல்லாமல், பெண் சப்-இன்ஸ்பெக்டரிம் அத்துமீற முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சப் இன்ஸ்பெக்டர், கத்தி கூச்சலிட மற்ற போலீசார் வந்துள்ளனர். மோகித் ராணா குறித்து அவர்களிடம் பெண் சப் இன்ஸ்பெக்டர் புகார் அளித்துள்ளார். அவர்கள் மோகித் ராணாவை பிடித்து கொண்டனர். அதன்பின் இது குறித்து பெண் சப்-இன்ஸ்பெக்டர் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தார். அதற்கு முன்பு தன்னிடம் ஆபாச படங்கள், வீடியோக்களை பார்க்க கட்டாயப்படுத்தியதையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த துணை சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். அதை அறிந்து கொண்ட மோகித் ராணா, தனது போனில் இருந்தவற்றை வேகவேகமாக அழித்துவிட்டு, போனையும் தூக்கி எரிந்துள்ளார்.
எனினும் விசாரணையில் மோகித் ராணாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ராணாவை போலீசார் கைது செய்தனர். அவரது செல்போனை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதன்பின் ராணா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு வழங்க வேண்டிய காவலரே சக பெண் போலீசிடம் போதையில் அத்துமீறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இதையும் படிங்க: ஹோலி கலர்ஸ் பிடிக்கலன்னா நாட்டை விட்டு போங்க.. உ.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு..!