×
 

35 ஆண்டுகளில் முதல்முறை! ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் நகரில் கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறையாக தேசியக் கொடி குடியரசு தினமான நேற்று ஏற்றி, வந்தேமாதரம், தேசியகீதம் பாடப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

ஒரு காலத்தில் புல்வாமா மாவட்டம் என்பது தீவிரவாதிகள், பிரிவினைவாதிகளின் கூடாரமாக இருந்தது. ஆனால் ட்ரால் நகரில் நேற்று தேசப் பக்தி பாடல்களும், பாரத் மதா கி ஜெய் என்ற கோஷங்களும் முழங்கின. பிடிபி எம்எல்ஏ ரபீக் நாயக் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த குடியரசுதின நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


தெற்கு காஷ்மீரில் வசிக்கும் மக்கள் கூறுகையில் “ புல்வாமா மாவட்டத்தின் ட்ரால் நகரில் கடந்த 35 ஆண்டுகளுக்கு பின் முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனர்.  முதியோர், இளைஞர்கள், சிறுவர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒன்றுகூடி தேசியக் கொடியை ஏற்றி ஒற்றுமையை வெளிப்படுத்தினர். 


ஜம்மு காஷ்மீரில் அமைதியற்ற பகுதியாக, அடிக்கடி தீவிரவாதத்தாக்குதல், தீவிரவாதிகள், பாதுகாப்புப்படையினருக்குமான சண்டை நடக்கும் பகுதியாக அறியப்பட்ட புல்வாமாவா மாவட்டத்தில் நேற்று அமைதியாகவும், எந்தவிதமான அசம்பாவிதமும் இன்றி குடியரசு தின விழா நடந்து முடிந்தது.

இதையும் படிங்க: ஸ்ரீநகர் - சோனாமார்க் சுரங்கப்பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடி..


பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கூறுகையில் “ ட்ரால் பகுதி என்றாலே அமைதியற்ற பகுதி, வெடிகுண்டு, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். இந்தப் பகுதியில் தேசியக் கொடி முதல்முறையாக ஏற்றப்பட்டு அமைதியும், முன்னேற்றமும், ஒருமைப்பாடும் வந்துள்ள வகையில் மாறியுள்ளது வியப்பாக இருக்கிறது. மக்கள் மூவர்ணக் கொடியை ஏந்தி வலம் வந்தது, தேசியக் கொடி ஏற்றும்போது வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜே, தேசிய கீதம் பாடப்பட்டது அற்புதமான தருணம். ஜனநாயகத்தில் ஒளிமயமான , சிறப்பான எதிர்காலம் தேவை என்பதைக் கருதிதான் இளைஞர்களும் அதிக அளவில் பங்கேற்றனர்.

ட்ரால் பகுதியில் மூவர்ணக்கொடி பறந்ததன் அர்த்தம் இங்கு அமைதி, வளர்ச்சி, ஜனநாயகம், அர்ப்பணிப்பு ஆகியவந்துவிட்டது என்பைத்தான் குறித்தது ” எனத் தெரிவித்தார்
ஜம்மு காஷ்மீர் போலீஸார், ராஷ்ட்ரிய ரைபிள்ஸ், சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்புடன் இந்த குடியுரசு தின நிகழ்ச்சி நடந்தது.

இதையும் படிங்க: அப்பார்மெண்டில் இறந்து கிடந்த இன்ஸ்டா பிரபலம்.. கண் கலங்க வைத்த கடைசி பதிவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share