போலீஸ் நிலைய பாத்ரூமில், புகார் அளிக்க வந்த பெண்ணுடன் உல்லாசம்: துணை சூப்பிரெண்டு சஸ்பெண்ட்; 'வைரல் வீடியோ' வெளியானது எப்படி ?
புகார் அளிப்பதற்காக போலீஸ் நிலையம் வந்த பெண்ணை மடக்கி பாத்ரூமில் உல்லாசமாக இருந்த போலீஸ் அதிகாரி பற்றி வைரல் வீடியோ வெளியானது.
இதை ஒட்டி அந்த அதிகாரி தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டிருக்கிறார்.
போலீஸ் நிலையத்தில் விசாரணை கைதிகள் துன்புறுத்தப்படுவது பற்றியும் பாலியல் சீண்டல்கள் போன்றவை நடப்பது பற்றியும் கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணுடன் போலீஸ் நிலையத்திலேயே அதிகாரி ஒருவர் உல்லாசமாக இருந்த நிகழ்வு தற்போது பரபரப்பைஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் மதுகிரி தாலுகாவின் துணை சூப் இரண்டாக பணியாற்றி வந்தவர், ராமச்சந்திரப்பா. இவருக்கு வயது 50. நேற்று முன்தினம் நிலப்பிரச்சினையில் புகார் அளிப்பதற்காக ஒரு பெண், மற்றும் சிலருடன் மதுகிரி போலீஸ் நிலையத்திற்கு வந்திருந்தார்.
இதையும் படிங்க: கட்சி கொடி கட்டிய ஜீப்பில் சென்று கொள்ளை... வீடு புகுந்து பெண்களுக்கு நரக வேதனை: ஞானசேகரனின் பண்ணை வீடு மர்மம்..!
அந்தப் பெண்ணுடன் வந்திருந்தவர்கள் தங்களுடைய பிரச்சினை குறித்து விசாரணை அதிகாரியிடம் மும்முரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் அந்த போலீஸ் நிலையத்தில் இருந்த துணை சூப்பிரெண்டு ராமச்சந்திரப்பா அந்த பெண்ணை அழைத்து பேசியிருக்கிறார். பின்னர் அந்தப் பெண்ணுடன் போலீஸ் நிலையத்தின் ஓரத்தில் இருந்த பாத்ரூமிற்கு அவர் சென்றார்.
அங்கு தனிமையில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்து இருக்கிறார்கள். இதை ரகசியமாக படம் பிடித்த யாரோ வீடியோவாக வெளியிட்டு விட்டனர். 35 வினாடிகள் ஓடிய இந்த வீடியோ மாநிலம் முழுவதும் வைரலாக பரவியது.
போலீஸ் அதிகாரி உல்லாசம் அனுபவித்த பின் அந்தப் பெண் இது பற்றி புகார் எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் வீடியோ ஏற்படுத்திய பரபரப்பு காரணமாக போலீஸ் அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து விசாரணை நடத்தினார்கள்.
மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வராவின் தொகுதியில் இந்த போலீஸ் நிலையம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அசோக் விசாரணைக்கு பின் மத்திய மண்டல ஐ.ஜி.க்குஅறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையின் அடிப்படையில் போலீஸ் டிஜிபி அலோக் மோகன் துணை சூப்பிரெண்டு ராமச்சந்திரப்பாவை தற்காலிக பணி நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டார்.
பாத்ரூம் ஜன்னலில் யாரோ ரகசியமாக வைத்திருந்த கேமரா மூலம் இந்த ஆபாச காட்சி படம் பிடிக்கப்பட்டு வீடியோவாக வெளியிடப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால் 35 வினாடிக்குள் காட்சி கேமராவில் படமாகி வருவதை அந்தப் பெண் பார்த்து விட்டார். அதனால் கேமரா உடனடியாக அகற்றப்பட்டு விட்டது.
நிலப் பிரச்சனையில் அந்தப் பெண்ணைச் சார்ந்தவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்காக தனது ஆசைக்கு இணங்கும்படி போலீஸ் அதிகாரி வலியுறுத்தினாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: காலிஃபிளவரில் கஞ்சா கடத்தி வந்த பெண் யார்? சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை..!