×
 

அடுத்த 3 நாட்களுக்கு அனாவசியமா வெளிய போகாதீங்க.. வெயில் அடி வெளுக்கப்போகுது.. ஜாக்கிரதை..!

சிங்கார சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு வெயில் வாட்டி வதைக்க போகிறது. பொதுமக்கள் யாரும் அனாவசியமாக வெளியே வர வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

பிரிக்க முடியாதது என்னவோ என திருவிளையாடல் சிவாஜி - நாகேஷ் பாணியில் கேள்வி எழுப்பினால், வெய்யிலும் - சென்னையும் என்று தாராளமாக பதில் தரலாம். அந்த அளவுக்கு டிசம்பர், ஜனவரி நீங்கலாக வருடத்தின் 10 மாதங்களும் ஆதவனின் நேரடி ஆசி பெற்ற ஊர் நம்ம சென்னை. 

பொதுவாக ஏப்ரல், மே ஆகிய இரண்டு மாதங்கள் தான் கொடுங்கோடையாக வரையறை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மார்ச்சில் ஆரம்பித்து ஆகஸ்ட் வரை நீடிக்கிறது தமிழ்நாட்டின் சமீபத்திய கோடைகாலம். இடையில் தென்மேற்கு பருவமழை வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. 

அப்படியொன்றும் பெரிய வெயில் இல்லையே, சமீபத்தில் கூட ஒன்றிரண்டு இடங்களில் திடீர் மழை பெய்ததே என கேள்வி வரலாம். 

இதையும் படிங்க: ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பறிபோன இளைஞரின் பார்வை.. ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு.!

தென் தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதியும் நிலவி வந்தது. அதனால் டெல்டா மாவட்டங்களில் சற்று கனமழையும், போனால் போகிறது என்று வடமாவட்டங்களில் தூறலும் வந்துபோனது. அதேநிலைதான் இப்போதும் வங்கக் கடலில் நீடிக்கிறது. எனவே தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆனால் வருணபகவானுக்கு சென்னை மீது துளியும் இரக்கம் இல்லையாம். அடுத்த மூன்று நாட்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை சென்னையில் வெய்யிலின் தாக்கம் இருக்குமாம். இவ்வாறு எச்சரித்திருப்பது தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தான். அதுமட்டுமல்லாது அதிக ஈரப்பதமும், அதிக வெப்பநிலையும் ஒரேநேரத்தில் உணரப்படுமாம். இதனால் உடல் உபாதைகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சூடேற்றப்பட்ட இரும்புக் கம்பியை குளிர்நீரில் முக்கினால் எப்படி பொங்கி இறுகுகிறதோ, அதுபோலத் தான் சட்டென்று மாறுது வானிலை என்ற சென்னை இருக்கப் போகிறது. 

எனவே பச்சிளம் குழந்தைகள், தாய்மார்கள், முதியோர் ஆகியோர் முடிந்தவரை வீட்டுக்குள் இருப்பது நலம். தேவையின்றி வெளியே வந்தால் சூரியபகவான் உச்சந்தலையில் கபடி ஆடிவிட வாய்ப்பு இருக்கிறது. அதனை மீறி வெளியே வரவேண்டிய தேவையிருந்தால் குடை, கூலிங்கிளாஸ், தேவையான குடிநீர் போன்றவற்றை கைவசம் வைத்துக் கொள்வது நல்லது..

இதையும் படிங்க: கல்லூரி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை.. கல்லூரி வளாகத்திலேயே பேராசிரியரை வெளுத்த மாணவர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share