அண்ணாமலை சொல்லறதுக்கு எல்லாம் கவலைப்பட முடியுமா..? - அதிமுக நெத்தியடி...!
பாஜக கூட்டணிக்காக யாரும் தவம் கிடைக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.
பாஜக கூட்டணிக்காக யாரும் தவம் கிடைக்கவில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.
சிவகங்கையில் சண்முகராஜா கலை அரங்கில் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், நாடாளுமன்ற தொகுதியில் தமிழகத்திற்கு ஒரு சீட் கூட குறைய கூடாது என்பது தான் அதிமுகவின் நிலைப்பாடு. ஆனால் மக்கள் விரோத திமுக ஆட்சியின் தோல்வியை மூடி மறைப்பதற்காகவே தொகுதி குறைக்கப்படுவதாக கூறி திமுகவினர் நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள் என்றார்.
ஆர்.எஸ் பாரதிக்கு பக்குவமும் இல்லை, அவருக்கு பேசவும் தெரியாது என கூறிய நத்தம் விஸ்வநாதன், வருகிற சட்டமன்ற தேர்தலுக்கு பின் திமுக ஆட்சி நிச்சயம் இருக்காது எனக்கூறினார்.
இதையும் படிங்க: 'திமுகவை கரடியே காரித் துப்பிவிட்டது..! மும்மொழி சர்ச்சைக்கு அண்ணாமலை பதிலடி..!
அதிமுக யாருக்காகவும் தவம் கிடக்கவில்லை என்றும், பா.ஜ.கவுடன் கூட்டணி என்று அதிமுக பொது செயலாளர் கூறவில்லை என்றும் கூறிய நத்தம் விஸ்வநாதன்,
எங்களுடைய அரசியல் எதிரி திமுகவே, அண்ணாமலை பேசுவதை பற்றி எங்களுக்கு கவலையே இல்லை எனக்கூறி பாஜகவிற்கு பதிலடி கொடுத்தார்.
நேற்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “பாஜக ஒரு தீண்டதகாத கட்சி, அது ஒரு நோட்டா கட்சி, அவர்களுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்று சொன்னார்கள். ஆனால், இன்று அவர்களே பாஜகவுடன் கூட்டணி வைக்க தவம் இருக்கிறார்கள். இதனால், நான் கர்வமாக இருக்கிறேன். தற்போது பாஜக இல்லாமல் தமிழ்நாடு அரசியலே கிடையாது என்ற சூழல் உருவாகியுள்ளது. எந்த கட்சியையும், தலைவரையும் நான் சிறுமைப்படுத்த விரும்பவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்வோம்.
எங்களுடைய நோக்கம் பாஜகவை நிலைநிறுத்துவது தானே தவிர, நாங்கள் யாருக்கும் எதிரி கிடையாது. தேசிய ஜனநாயக கூட்டணி இன்றும் பலமாக இருக்கிறது. எனவே, சரியான நேரத்தில் கூட்டணி குறித்து பேசுவோம்.” எனத் தெரிவித்திருந்தார். இந்த கருத்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அதற்கு நந்தம் விஸ்வநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 'பாஜகவுடன் கூட்டணிக்கு அதிமுக தவம் கிடக்கிறது…! மீண்டும் கலைத்துப் போட்டு ஆடும் அண்ணாமலை..!