×
 

கெளரி லங்கேஷ் கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..

கெளரி லங்கேஷ் கொலைவழக்கில் 17 பேருக்கும் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்..

பெங்களூருவில் பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபர்களில் கடைசி நபரான ஷரத் பாபுசாஹேப் கலாஸ்கருக்கும் பெங்களுரு நகர சிவில் மற்றும் கூடுதல் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதன் மூலம் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 18 பேரில் 17 பேருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது, ஒருவர் மட்டும் தலைமறைவாகிவிட்டார்.
கடந்த 2018ம் ஆண்டு, செப்டம்பர் 5ம் தேதி முதல் சிறையில் இருந்த கலாஸ்கருக்கு , கடும் நிபந்தனைகள் அடிப்படையில் நீதிபதி முரளிதரமா பாய் ஜாமீன் வழங்கியுள்ளார்.
இந்த கொலைவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் ஜாமீன் வழங்கிவிட்ட நிலையில் மனுதாரரான கலாஸ்கருக்கு மட்டும் ஜாமீன் கிடைக்கவில்லை, மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கிவிட்டதை சுட்டிக்காட்டி கோரிய நிலையில் கலாஸ்கருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.


நீதிபதி முரளிதரமா பாய் குறிப்பிடுகையில் “ மனுதாரர் கடந்த 2018, செப்டம்பர் 8ம் த தேதி முதல் போலீஸ் பாதுகாப்பில் இருக்கிறார். அரசியலமைப்புச் சட்டம் 21ன்படி வழக்கில் விரைவான விசாரணை கோருவது மனுதாரர்களின் அடிப்படை உரிமை என்றும், தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டு, மனுதாரர் உரிமை பாதிக்கப்பட்டால் ஜாமீன் வழங்கலாம் என உச்ச நீதிமன்றம் பலமுறை குறிப்பிட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
பெங்களூருவில் வெளிவந்த “கெளரி லங்கேஷ் டெய்லி” என்ற பத்திரிகையின் ஆசிரியராக கெளரி லங்கேஷ் இருந்தார். இடதுசாரி சிந்தனையாளரான கெளரி லங்கேஷ் பெங்களூரு ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்தார். கடந்த 2017, செப்டம்பர் 5ம் தேதி அவரின் இல்லத்தின் முன் பைக்கில் வந்த சிலர் அவரை சுட்டுக்கொன்றனர். 

இதையும் படிங்க: ‘டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்’: ஐஐடி ரூர்கே மின்அஞ்சலைப் பார்த்து ‘ஷாக்’ ஆகிய கேட் விண்ணப்பதாரர்..

இந்த வழக்கில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்து ராஷ்ட்ரா அமைப்பைச் சேர்ந்த 17 பேரைக் கைது செய்தனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும்,  அடிக்கடி குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், திட்டமிட்டு குற்றங்கள் செய்வோர், சித்தாந்தரீதியாக செயல்படுவோர், இவர்களுக்கு ஆயுதம் தயாரிக்கவும், வெடிகுண்டு தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதையும் படிங்க: எச்என்பிவி வைரஸ் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? கர்நாடக மாநிலத்தில் 2வது குழந்தை பாதிப்பு...

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share