3 நாட்களில், தலை வழுக்கையாகும் "டக்ளா வைரஸ்"பரவுகிறது : மகாராஷ்டிரா மாநிலத்தில் பீதி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூன்று நாட்களில் தலை வழுக்கையாகும் புதிய வைரஸ் பரவி வருவதால் மகாராஷ்டிரா மாநிலத்தில் பீதி ஏற்பட்டுள்ளது.
'ஹெச் எம் பி வி வைரஸ்' அச்சத்துக்கு இடையே, மகாராஷ்டிராவின் புல்தானா மாவட்டத்தில் ஷேகான் பகுதியை சேர்ந்த 15 கிராமங்களில் இதனால் 55 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். வழக்கத்தை விட அதிகமாக முடி கொட்டி வருவதால் மூன்று நாட்களில் அவர்களுடைய தலையில் மூன்று நாட்களில் வழுக்கை ஏற்பட்டு வருகிறது.
இந்த புதிய நோய் பரப்பும் கிருமிகளுக்கு 'டக்ளா வைரஸ்' என்ன பெயர் சூட்டப்பட்டுள்ளது.சுகாதாரத்துறை அதிகாரிகள் இதற்கான காரணத்தை கண்டறிய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பிட்ட சில நிறுவனங்களின் ஷாம்புகளை பயன்படுத்தியது இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளது.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு 'அடுத்த அடி' : டெல்லி தேர்தலில் கெஜ்ரிவாலுக்கு சமாஜ்வாதி ஆதரவு; தனித்து களம் காண்கிறார், மாயாவதி
அவர்களை பரிசோதித்த தோல் சிகிச்சை டாக்டர் ஒருவர், பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவீதத்திற்கும் மேல் தலையில் அரிப்பு இருப்பதாகவும், இது குளிர் காலத்தில் ஏற்படும் பூஞ்சை தொற்று போன்றவை என்றும் தெரிவித்தார்.
அந்த கிராமத்திலிருந்து தண்ணீர் மாதிரிகளை சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டதில், மக்கள் பயன்படுத்தும் தண்ணீரில் 10 மில்லி கிராம் அளவில் மட்டுமே இந்த ரசாயன பொருள் இருக்க வேண்டும். ஆனால் 54 மில்லி கிராம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் ஈயம் மற்றும் ஆர்ஸானி போன்ற ரசாயன நச்சுகளும் தண்ணீரில் கலந்திருப்பதாகவும் கண்டறியப்பட்டு ஏள்ளது அதை தொடர்ந்து புனே ஆய்வுக்கூடங்களுக்கு தண்ணீர் மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் இன்னும் 10 நாட்களுக்குள் தெரிந்து விடும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு 'ஷாக்' : பா.ஜ.க. கூட்டணியில் இணையும் சரத் பவார் கட்சி; மகளுக்கு மத்திய அமைச்சர் பதவி: பரபரக்கும் 'மகாராஷ்டிரா அரசியல்'