×
 

மயிலு பெத்த மகளா இது? ஹாலிவுட் ஹீரோயின் போல் மின்னும் ஜான்வி கபூர்!

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர், ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சிக்கு விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, 14 - 15 வயதிலேயே ஹீரோயினாக மாறியவர் தான் ஸ்ரீதேவி.
 

ரஜினி - கமல் ஹாசனுடன் ஒரே படத்தில் இணைந்து நடித்த பெருமைக்குரிய இவர், இந்த இரண்டு டாப் ஹீரோக்களுடன் தான் அதிகமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: மயிலு மகளின் காதல்... ரெய்னாவுடன் டேட்டிங்... ஸ்ரீதேவி மகளின் ரகசிய நெருக்கம்..!

தென்னிந்திய மொழிகளில் நிலையான இடத்தை பிடித்த பின்னர், அதிரடியாக பாலிவுட் திரையுலகின் பக்கமும் சென்றார்.

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களான, தர்மேந்திரா, அணில் கபூர், அபிதாப் பச்சன் என பல நடிகர்களுக்கு ஜோடியாக இவர் நடித்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து ஹிட் அடித்தன.

ஒரு கட்டத்தில் பாலிவுட் திரையுலக ரசிகர்கள் மனதை கவர்ந்த, மகாராணியாக மாறிய ஸ்ரீதேவி. லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தை பெற்றார்.

தென்னிந்திய திரையுலகில் இருந்து பாலிவுட் பக்கம் சென்று, அங்கும் வெற்றி கொடி நாட்டிய ஸ்ரீதேவி பல நடிகைகளுக்கு இன்றுவரை இன்ஸ்பேரேஷனாக இருந்து வருகிறார்.

தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, சினிமாவில் இருந்து விலகிய ஸ்ரீதேவி, 2018, ஆம் ஆண்டு துபாய்யில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

இவரை தொடர்ந்து இவரின் பிள்ளைகளும், திரையுலகில் கால் பதித்து வெற்றி கனியை ருசித்து வருகிறார்கள்.

குறிப்பாக ஜான் கபூருக்கு பாலிவுட் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

பாலிவுட் திரையுலகில் நிலையான இடத்தை பிடித்த வேகத்தில், 'தேவாரா' திரைப்படம் மூலம் தெலுங்கிலும் கால் பதித்தார்.

இந்நிலையில் ஜான்வி கபூர் விதவிதமான உடையில் எடுத்து கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ரஜினியை ரகசியமாக காதலித்த ஸ்ரீதேவி... 7 நாட்கள் உண்ணாவிரதம்... மாமா மனசிலாயோ..?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share