×
 

நின்றது சிசுவின் இதயத்துடிப்பு..! ரயிலில் இருந்து தள்ளிவிட்டதால் நடந்த கொடூரம்..

ரயிலில் இருந்து தள்ளிவிட்டதால் நடந்த கொடூரம்.. நின்றது சிசுவின் இதயத்துடிப்பு..!

திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் தனது சொந்த ஊரான ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தார். கோவை திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்ற அவர் ஜோலார்பேட்டையில் பெண்களுக்கான பெட்டியில் தனிமையில் அமர்ந்திருந்தார்.

அப்போது அந்தப் பெட்டியில் ஏறிய ஹேமராஜ் எனும் நபர் அந்த பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்து டார்ச்சர் செய்துள்ளார். அந்தப் பெண் அவருடன் போராடவே ஒரு கட்டத்தில் சைக்கோவான ஹேமராஜ் அந்த பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளி உள்ளார்.

 நான்கு மாத கர்ப்பிணியான அந்த பெண் காப்பாற்றப்பட்டு ஆம்புலன்ஸ் மூலமாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நான்கு மாதம் கர்ப்பிணியாக இருந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சைக்கோ நபர் 30 வயது சேர்ந்த ஹேமந்த் ராஜ் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: கர்ப்பிணியை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட சைக்கோ ஹேமராஜ் யார்..??அதிர்ச்சி பின்னணி

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வந்தது. மேலும் அவரது கை, கால்களில் முறிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சைக்கோ கொடூரனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏற்கனவே உடல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மனரீதியாக பேரிடி ஒன்றும் விழுந்து இருக்கிறது. நான்கு மாத கர்ப்பிணியாக இருந்த அந்த பெண்ணின் வயிற்றில் இருக்கும் சிசுவின் இதயத் துடிப்பும் தற்போது நின்று விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சைக்கோ கொடூர நாள் ஒரு பெண் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது வயிற்றில் இருக்கும் சிசுவிற்கும் தற்போது கொடூர நிலை ஏற்பட்டு இருப்பது மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படுமா? மேல் முறையீட்டு மனு விசாரணைக்கு ஏற்பு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share