சவால் விட்ட சாமுண்டீஸ்வரி.. கல்யாணத்தில் காத்திருக்கும் திருப்பம் என்ன? கார்த்திகை தீபம் இன்றைய அப்டேட் !
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் இன்றைய அப்டேட் குறித்து பார்ப்போம்.
கடந்த சனிக்கிழமை எபிசோடில் மகேஷ் ரேவதியிடம் உண்மையை சொல்ல போக மாயா கடைசி நொடியில் வந்து தடுத்து நிறுத்த கார்த்தியின் திட்டம் தோல்வியடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது, மாயா நல்ல வேலை நீ உண்மைய சொல்லல.. இல்லனா இந்நேரம் எல்லாமே முடிந்து போயிருக்கும் என சொல்கிறாள். இங்கே சாமுண்டீஸ்வரி வீட்டில் ரேவதி மருதாணி வைத்திருக்க திடீரென்று அவளுக்கு விக்கல் வர இரண்டு கையிலும் மருதாணி இருக்கும் கார்த்திக் தண்ணீர் எடுத்து கொடுக்கிறான். அதன் பிறகு ரேவதிக்கு போன் போனை எடுத்து காதில் வைத்து பேச வைக்கிறான்.
இதை பார்த்த மயில் வாகனம் இவங்களுக்குள்ள லவ்ஸ்ஸா என கதவை சாற்றி விட்டு செல்ல கார்த்திக் ஏன் இப்படி பண்றீங்க என திட்டுகிறான்.
இதையும் படிங்க: மகேஷ், மாயா உறவை அம்பலப்படுத்த கார்த்திக் போடும் திட்டம்? நடக்கப்போவது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
அடுத்ததாக சிவணான்டி வீட்டுக்கு வர சாமுண்டீஸ்வரி நீ ஜெயிலில் தானே இருந்த என்று கேட்க ஆமாம் அங்கிருந்து தான் வருகிறேன். கல்யாணத்தில் உனக்கு ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்லு சாமுண்டீஸ்வரி உனக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என சொல்கிறாள்.
மேலும் பத்திரிக்கை ஒன்றை கொடுத்து கல்யாணத்துக்கு வந்தது நல்லபடியா சாப்பிட்டு போ என பதிலடி கொடுக்கிறாள்.அடுத்ததாக டாக்டர் மல்லிகா சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு அழைத்து அந்த மகேஷ் எப்படிப்பட்டவன் என்று சொல்லிட்டேன் அப்படி இருக்கும்போது நீ உன் பொண்ணை அவனுக்கு தான் கட்டிக் கொடுப்பேனு எல்லா வேலையும் பண்ணிக் கிட்டு இருக்க என திட்டுகிறார்.
சாமுண்டீஸ்வரி கொஞ்சம் பொறுமையா இரு இந்த கல்யாணம் நல்லபடியாக நடக்கும் என சொல்ல இவர்கள் பேசுவதை சந்திரகலா தூரத்திலிருந்து கேட்டபடி இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: நகையை வைத்து மாயாவை சிக்க வைத்த கார்த்திக்.! பொங்கி எழுந்த ரேவதி - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் !