×
 

கணவருடன் ஒரே கிளுகிளுப்பு தான்.. கீர்த்தி சுரேஷின் ரொமான்டிக் போட்டோஸ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தின் போது எடுத்து கொண்ட, புகைப்படங்களை அண்மையில் வெளியிட்ட நிலையில் அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். மலையாள பைங்கிளியான, இவருடைய அம்மா மேனகா நடிகை ஆவார். இவரின் தந்தை சுரேஷ் மலையாள படங்களின் தயாரிப்பாளர்.
 

சினிமா பின்னணியை சார்ந்த கீர்த்தி சுரேஷுக்கு சிறு வயதிலேயே சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தன.

இதையும் படிங்க: "வயதானாலும், நடிகைகளும் திறமைசாலிகள்தான்" 53 வயதான மனிஷா கொய்ராலாவின் ஆதங்கம்

இதை தொடர்ந்து கல்லூரி படிப்பை முடித்த பின்னர், மலையாள திரையுலகில் ஹீரோயினாக களமிறங்கினார்.

அந்த வகையில் இவர் நடித்த கீதாஞ்சலி திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்று தந்தது.

இதன் பின்னர் தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இவரை தான் இயக்கிய 'இது என்ன மாயம்' படத்தில் ஹீரோயினாக நடிக்க வைத்தார்.

முதல் படம் தோல்வியை தழுவிய நிலையில், தொடரி படத்தில் இவரின் சிறப்பு போன்றவை விமர்சனங்களுக்கு ஆளானது.

தன்னுடைய மைனஸ் எல்லாவற்றையும் களைத்து, இன்று முன்னணி நடிகையாக கீர்த்தி சுரேஷ் மாறி உள்ளதற்கு முக்கிய காரணம் இவரின் விடா முயற்சி தான்.

விஜய், சிவகார்த்திகேயன் சூர்யா, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக மட்டும் இன்றி ஹீரோயின் கதையம்சம் கொண்டு எடுக்கப்படும் படங்களிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் நடித்த மகாநடி திரைப்படம் இவருக்கு, தேசிய விருதை பெற்று தந்தது.

தென்னிந்திய திரையுலகை தாண்டி பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் காலடி எடுத்து வைத்தார்.

மேலும் பேபி ஜான் படம் வருவதற்கு முன்பே தன்னுடைய காதலர் ஆண்டனி தட்டில் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இவரின் திருமணம் நடந்த நிலையில், இவர் திருமணத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை வெளியிட, அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: "காதலனை திருமணம் செய்து, திருப்பதியில் "செட்டில்" ஆக வேண்டும்" : நடிகை ஜான்வி கபூர் விருப்பம்; "3 குழந்தைகளை பெற்றுக் கொள்ளவும் ஆசை" என்கிறார்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share