×
 

கும்பமேளாவில் குளித்த விஜயகாந்த் குடும்பம்..! நெத்தியில் பட்டையோடு போட்டோ..!

மகா கும்பமேளாவில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மகன்கள் பங்கேற்று புனித நீராடினர்.

உத்தரப்பிரதேச மாநிலம் பிராயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமான முறையில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. 13 கின்னஸ் சாதனைகள் படைக்கும் அளவிற்கு மக்கள் திரண்டு வந்து மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இதுவரை சுமார் 55 கோடி முறை புனித நீராடப்பட்டுள்ளது என உத்தரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரக்யாராஜில் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி விமர்சையாக நடைபெற்று வரும் இந்த கும்பமேளாவில் நாள்தோறும் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருந்தும் சாதாரண மக்கள் முதல் விஐபிகள் வரை படையெடுத்து வந்து புனித நீராடி செல்கின்றனர். கங்கா, யமுனா, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் கூடும் இடம் தான் திருவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: வாரணாசியில் சிக்கி தவித்த தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள்... கும்பமேளா கூட்டத்தால் ரயிலில் ஏற முடியாமல் தவிப்பு..! 

முன்பு அலகாபாத் என அழைக்கப்பட்டு வந்த பிரயாக்ராஜ் நகரத்தில் தான் இந்த திரிவேணி சங்கமம் அமைந்துள்ளது. புத்த பௌர்ணமியை முன்னிட்டு தொடங்கிய கும்பமேளா, தற்போது 38 நாட்களுக்கும் மேலாக புனித நீராடல் தொடர்ந்து வருகிறது உலகத்தின் மிகப்பெரிய ஆன்மீக திருவிழாவாக பார்க்கப்படும் இந்த மகா கும்பமேளா புனித நீராடல் நிகழ்ச்சிக்கு தொடர்ந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

குடியரசு தலைவர், பிரதமர், மூத்த அமைச்சர்கள், சினிமா பிரபலங்கள், என பலரும் புனித நீராடி தரிசனம் பெற்றனர். தமிழகத்திலிருந்து ரயில்கள் மற்றும் கார்கள் விமானங்கள் மூலம் தொடர்ந்து பக்தர்கள் புனித நீராட சென்று கொண்டிருக்கின்றனர் அந்த வகையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பமும் புனித நீராடுவதற்காக பிரயாக்ராஜ் சென்று தங்கி அங்குள்ள கோவிலில் வழிபட்டு பின்னர் புனித நீராடினர்.

கேப்டன் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் அவரது மைத்துனர் எல்.கே சுதீஷ் ஆகியோரது குடும்பங்கள் ஒன்றாக சேர்ந்து இந்த புனித நீரடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
 

இதையும் படிங்க: பெண்கள் குளிப்பதை லைவ் வீடியோ செய்த கொடூர அரக்கர்கள்.! கும்பமேளாவில் அட்ராசிட்டி.. டெலிக்ராம் சேனல் முடக்கம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share