என்.எல்.சி சுரங்கத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு..!
நெய்வேலி என்.எல்சி சுரங்கத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு மேற்கொண்டது.
இந்தியாவிலேயே மிகப்பெரிய, திறந்தவெளியில் நிலக்கரிச் சுரங்கம் கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தான் உள்ளது. பழுப்பு நிலக்கரியைக் கொண்டு இங்கு மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளாக இங்கு பழுப்பு நிலக்கரியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு மட்டுமல்லாது, தென் மாநிலங்கள்அனைத்திற்கும் தேவையான மின் தேவையைப் பூர்த்தி செய்து வருகிறது நெய்வேலி அனல் மின் நிலையம். நெய்வேலியில் 1934ம் ஆண்டுதான் பழுப்பு நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றாலும் கூட, 1828ம் ஆண்டே பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வுகள் தொடங்கி விட்டன.
என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு மதிப்புமிக்க 5 மற்றும் 4 மதிப்பீட்டு நட்சத்திரங்களை மத்திய சரி நிலக்கரி அமைச்சகம் வழங்கி உள்ளது.
இதையும் படிங்க: தரிசன டிக்கெட்டுகள் இருந்தால் மட்டுமே அறைகள் ஒதுக்கீடு:திருப்பதி தேவஸ்தானம் அதிரடி..!
இந்த நட்சத்திர மதிப்பீடு என்பது நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி சுரங்கங்களில் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டது.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், நவரத்தின மதிப்பைப் பெற்றது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை தமிழக அரசின் 5 பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.360 கோடிக்கு வாங்கியுள்ளன.
இந்த நிலையில் நெய்வேலி என்.எல்சி சுரங்கத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் தலைவர் நந்தகுமார், கிரி, சிந்தனைச் செல்வன் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆய்வு நடத்தினர். கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெய்வேலி எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் ஆய்வு நடத்தினர்.
சுரங்கங்களின் செயல்பாடுகள் மற்றும் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மேலும் நிலக்கரி கையிருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்தும் நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்ட பகுதி சமன் செய்யப்பட்டும் பூங்காக்களாகவும் வைக்கப்பட்டுள்ளது. அந்த இடங்களையும் ஆய்வு செய்தனர். மேலும் வளர்ப்பு பிராணிகள், பயிர்கள், வளர்ப்பு மீன்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதையும் படிங்க: திடீர் தொழில்நுட்ப கோளாறு.. ஒரு மணி நேரம் வானத்தில் வட்டமடித்த விமானம்.. அச்சத்தில் உறைந்த பயணிகள்..!