×
 

பெரிய கட்சிகள் கூப்பிட்டே போகாதவன்.. விஜய்யிடம் கூட்டணி வைப்பேனா.? தவெக கூட்டணிக்கு நோ சொன்ன சீமான்

தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

மதுரையில் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழகத்தில் முதலில் இந்தி மொழியைத் திணித்ததே காங்கிரஸ் கட்சிதான். அந்தக் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. பல மொழிகள் இருந்தாலும் இந்தியாவில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்வதுதான் சிறப்பு. இந்த நாட்டை துண்டாட பாஜக துடிக்கிறது.

​​​

இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டுமானால் மொழிவாரியாக மாநிலங்கள் ஏன் பிரிக்கப்பட்டன? இந்தி மொழியைப் படிப்பதற்கு அந்த மொழிக்கு அப்படி என்ன சிறப்பு காரணம் உள்ளது? இந்திய மொழி இந்திதான் என்று அரசியல் சாசனத்தில் எங்கு கூறப்பட்டுள்ளது? இந்தியா பல மொழி பேசும் மக்கள் ஒன்றிணைந்த ஐக்கியம். நாடு எங்கும் இந்தி மொழியைத் திணிப்பது தேவையற்றது.

இதையும் படிங்க: திமுகவின் நாடகம்..! இந்தியை 'இந்திய மொழி' என்று சொன்ன பைத்தியக்காரன் யார்..?- சீமான் ஆத்திரம்..!

இரண்டு மூன்று மாநிலங்களில் மட்டும் பேசக்கூடிய இந்தியை திணிக்க நினைப்பது தவறு. இந்தி மொழி தேவையெனில் கற்றுக் கொள்ளலாம். இந்தி மொழி விவகாரத்தில் திராவிடர்களை நம்பக் கூடாது. இந்தி படித்தால் அடுத்த கட்ட வளர்ச்சி என்றால், வட மாநிலத்தில் இருந்து ஒன்றரை கோடி மக்கள் ஏன் தமிழகத்துக்கு வேலைக்காக வருகிறார்கள்.


நான் நோட்டுக்காக, சீட்டுக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. நாட்டுக்காக அரசியலுக்கு வந்துள்ளேன். தன்னை முன் நிறுத்தி கொள்ள நினைப்பவர்கள்தான் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி செல்கிறார்கள். நாம் தமிழர் கட்சியில் கட்சிக்காக நான், எனக்காக கட்சி என செயல்பட வேண்டும். சீமானுக்குப் பின் யார் தலைவர் எனும் போட்டியால் நாம் தமிழர் கட்சியில் இருந்து செல்கின்றனர்.

திராவிடத்தைப் பற்றி பேசாமல், பெரியாரை பற்றி பேசாமல் நாம் தமிழர் கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தும்  நான் செல்லவில்லை. எனவே, தமிழக வெற்றி கழகத்துடன் நாம் தமிழர் கட்சி கூட்டணி வைப்பது சரியாக வராது" என்று சீமான் தெரிவித்தார்..

இதையும் படிங்க: 'நாதகவினரை சீமான் பாஜகவிடம் விற்றுவிடுவார்...' கொ.ப செ., தமிழரசன் பரபரப்பு குற்றச்சாட்டு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share