46 வயதில் குழந்தை பெற்றுக்கொள்ள போகும் ரெடின் கிங்ஸ்லி மனைவி சங்கீதா! வளைகாப்பு புகைப்படங்கள்!
சீரியல் நடிகை சங்கீதா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் இவரது, வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
தமிழில் ஏராளமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானவர் ரெடின் கிங்ஸ்லி.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான, கோலமாவு கோகிலா படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர்.
இதை தொடர்ந்து ஏராளமான படங்களில் காமெடி வேடத்தில் நடித்து பிரபலமானார்.
47 வயதாகும் இவர், 46 வயதான சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து வந்தார்.
இருவரும் 2023-ஆம் ஆண்டு மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர்.
ரெடின் கிங்ஸ்லிக்கு இது முதல் திருமணம் என்றாலும் சங்கீதாவுக்கு இரண்டாவது திருமணம் ஆகும்.
தற்போது நிறைமாத கர்ப்பமாக இருக்கும் சங்கீதாவுக்கு வளைகாப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படிங்க: மகாராணியாய் மாறிய நிதி அகர்வால்; கண் கொட்டாமல் ரசிக்க வைக்கும் போட்டோஸ்!
விரைவில் வளைகாப்பு நலங்கு புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹீரோயினுடன் சேர்ந்து பீடி பிடிக்கும் சசிகுமார்.. வெளியானது மை லார்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!