#BREAKING சைஃப் அலிகானை 6 முறை கத்தியால் குத்தியது இவரா? - முக்கிய குற்றவாளி மும்பை போலீசால் கைது!
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்திய நபரை மும்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை வீட்டிற்குள் புகுந்து கத்தியால் குத்திய நபரை மும்பை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
நேற்று அதிகாலை 3 மணிக்கு சைஃப் அலி கான்- கரீனா கபூரின் வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், அவரை கத்தியால் பலமுறை தாக்கினார். சைஃப் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டது. மொத்தம் 6 கத்திக்குத்துக்களில் 2 மிகவும் மோசமான நிலையில் இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு சைஃப் அலிகான் நலமுடன் இருப்பதாக மும்பை லீலாவதி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதனிடையே சைஃப் அலிகான் வீட்டிற்குள் நுழைந்த மர்ம ஆசாமி யார் என்பது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். முதற்கட்டமாக வீட்டைச் சுற்றியிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அதில் தாக்குதல் நடத்திய நபர் குறித்த வீடியோவையும் வெளியிட்டனர். தப்பிய கொள்ளையனை பிடிக்க 20 தனிப்படைகள் அமைக்கப்பட்ட நிலையில், மோப்ப நாய்கள் மற்றும் தடவியல் துறையினரைக் கொண்டு சைஃப் அலிகான் வீட்டை போலீசார் சல்லடைப் போட்டு தடயங்களை தேடி வந்தனர்.
தற்போது சைஃப் அலிகானை கத்தியால் குத்தியதாக சந்தேகப்படும் நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த நபர் தற்போது பந்த்ரா காவல் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னதாக சைஃப் அலிகான் வீட்டில் பணிபுரிந்த 3 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.