#BREAKING போலீஸ் போட்ட திடீர் உத்தரவு... சீமான் கார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தம்... காரணம் என்ன?
நடிகை பாலியல் வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு சீமான் ஆஜராகவிருந்த நிலையில், போலீசார் 15 நிமிடம் கழித்து ஆஜராக வரும் படி தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகை பாலியல் வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு சீமான் ஆஜராகவிருந்த நிலையில், போலீசார் 15 நிமிடம் கழித்து ஆஜராக வரும் படி தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வீட்டில் சம்மன் ஒட்டிய விவகாரத்தில் காவலர்களுடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக, இரண்டு பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கைதான நபர்கள் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீமான், "நான் எங்கேயும் ஓடி ஒளியவில்லை. காவல்துறையின் விசாரணைக்கு ஆஜராகப் போவதில்லை" எனக்கூறினார்.
தொடர்ந்து இன்று இரவு 8 மணிக்கு வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாகவும் சீமான் அறிவித்திருந்தார். இதற்காக திருச்சியில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்த சீமான் முதலில் வடபழனியில் உள்ள தனியார் விடுதிக்குச் சென்றார். அங்கு நாம் தமிழர் கட்சி முக்கிய நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்களுடன் சீமான் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். ஒருவேளை தான் திடீரென கைது செய்யப்பட்டால் என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும், போலீசாரின் விசாரணையை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றெல்லாம் சீமான் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: சற்று நேரத்தில் கைதாகிறா சீமான்..? காவல்துறையின் திட்டம் என்ன..? வளசரவாக்கத்தில் கொந்தளிப்பு..!
இதனையடுத்து வடபழனியில் உள்ள தனியார் ஓட்டலில் இருந்து வளசரவாக்கம் காவல்நிலையம் செல்வதற்காக சற்று முன்பு சீமான் தனது காரில் ஏறி புறப்பட்டார். சீமான் பாதி வழியைக் கடந்திருந்த நிலையில், 8 மணிக்குப் பதிலாக 15 நிமிடம் கழைத்து ஆஜராகும் படி சீமானுக்கு போலீசார் தகவல் அனுப்பியுள்ளனர். இதனையடுத்து சீமானின் கார் வடபழனியில் உள்ள ஏவிஎம் ஸ்டூடியோ அருகில் பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக வளசரவாக்கம் காவல்நிலையம் முன்பாக நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சியினர் குவிந்துள்ளனர். அவர்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டிருப்பதோடு, சீமானிடம் 20 கேள்விகளைக் கேட்கவும் திட்டமிட்டுள்ளார்களாம். அதற்காக 20 நிமிடம் தேவைப்படுவதால் கால அவகாசத்தை நீட்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: சீமான் தம்பிகளால் ஸ்தம்பித்த வளசரவாக்கம்... காவல்நிலையம் முன்பு மாபெரும் போராட்டம்...!