15 வருடமா என்னையும், என் குடும்பத்தையும் கற்பழிக்கிறீங்க... பகீர் கிளப்பும் சீமான்...!
15 வருஷமா நீங்க எல்லாரும் சேர்ந்து என்னையும், என் குடும்பத்தையும், என்னைச் சார்ந்தவர்கள் எல்லாரையும் கற்பழிக்கிறீங்க. வன்புணர்வு செய்யுறீங்க. எங்க மனநிலை எப்படி இருக்கும்?.
விருப்பமில்லாமல் ஒரு பெண்ணை கடத்தி வன்புணர்வு செய்தால் தான் குற்றம். நான் இருக்கும் உயரம் உங்களுக்கு பயம் காட்டுகிறது. வளர்ந்து விடுவேனோ என்ற அச்சம் வந்துவிட்டது. என்னை சமாளிக்க முடியவில்லை என்றால் அந்தப் பெண்ணை (விஜயலட்சுமி) கூட்டி வருவார்கள். இப்போது போனாலும் , அடுத்து சரியாக 2026 தேர்தலில் மீண்டும் கூட்டி வருவார்கள். எங்கள் வீட்டில் நடந்த காவல்துறையின் நடவடிவக்கை அநாகரீகமானது எனக்கூறியுள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விரும்பமில்லாத ஒரு பெண்ணை கடத்திக்கிட்டுப் போய் வலுக்கட்டாயமாக புணர்ந்தால் தான் வன்புணர்வு. அது குற்றம். நீங்க விரும்பி படுத்தால் அதுக்கு பெயர் என்னவென சொல்லுங்க. கடந்த 15 வருஷமா நீங்க எல்லாரும் சேர்ந்து என்னையும், என் குடும்பத்தையும், என்னைச் சார்ந்தவர்கள் எல்லாரையும் கற்பழிக்கிறீங்க. வன்புணர்வு செய்யுறீங்க. எங்க மனநிலை எப்படி இருக்கும்?.
ஒரு பொம்பள அவ என்ன சொல்றான்னு தெரியாம நீ பாட்டுக்கு போட்டுட்டே இருக்க. நான் அரசியல்ல இவ்வளவு உயரமா இல்லைன்னா என்னைப் பார்த்து பயப்படுவீயா?. நான் சாதாரண சினிமா இயக்குநர், எனக்கு மார்க்கெட் இல்ல, ஒன்னும் இல்லைன்னா அவ பேசுவாளா?, நீ பேசுவியா? என ஒருமையில் சாடிய சீமான், நான் இருக்கிற உயரம் உனக்கு பயம் காட்டுது. நான் வளர்ந்துருவேன்னு நினைச்சி அச்சப்படுற என திமுகவை மறைமுகமாக விமர்சித்துள்ளார். அதனால் தான் அந்த பொம்பளையை கூட்டிக்கிட்டு வந்து சண்டை போடுறாங்க. வீரன்னா நேருக்கு நேரா நிக்கனும், இப்படி பொம்பளைக்கு பின்னாடி போய் நிற்கக்கூடாது என்றும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: “விருப்பமில்லாமல் கடத்தி வன்புணர்வு செய்தால்தான் குற்றம்...”- தன்னை நியாயப்படுத்தும் சீமான்..!
இதுக்காக ஒரு கூட்டத்தை வச்சிக்கிட்டு, பேச விட்டுக்கிட்டே இருக்கிறது. அவர்களுக்கு மாச சம்பளம் வேறு. பல நேரங்களில் என்னை சமாளிக்க முடியவில்லை. அப்போது எல்லாம் அந்த பெண்ணை கூட்டிக்கிட்டு வருவாங்க. சரியா 2026 தேர்தலின் போது மறுபடியும் கூட்டிட்டு வருவாங்க. இந்த துயரம் தாங்காமல் தான் அந்த வழக்கை சீக்கிரம் முடிச்சி விடுங்கன்னு நீதிமன்றம் போனேன். ஆனா அதுவும் சரியா வரல. இப்போ அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் போயிருக்கு எனக்கூறினார்.
இதையும் படிங்க: சீமான் வீட்டு பாதுகாவலர் கைது செய்யப்பட்ட விவகாரம்.. அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் மறுப்பு..!