×
 

சௌந்தரபாண்டி செய்த சூழ்ச்சி.. சண்முகத்தை விரட்டி விட்ட பரணி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்!

தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த தொடரின் இன்றைய அப்டேட் குறித்து பார்க்கலாம்.

இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் சண்முகம் பரணி பீச்சுக்கு சென்றிருக்க பெரிய அலை பரணியை கீழே தள்ளிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, பரணி கீழே விழ சண்முகம் அவளுக்கு என்னாச்சு என்று அதிர்ச்சி அடைகிறான். இதையடுத்து இருவரும் பீச்சில் ஓடி பிடித்து விளையாடி நெருக்கமாகின்றனர்.  அதன் பிறகு இருவரும் ரிசார்ட்டில் தங்க பரணி தூங்கி கொண்டிருக்க அவள் பக்கத்தில் அமர்ந்து அவளையே ரசித்தப்படி இருக்கும் சண்முகம் நான் இங்க வந்ததே உன்னோட சநதோஷமாக இருக்க தான். நமக்குள்ள நடக்க வேண்டியது நடந்து நீ கர்ப்பமாகிட்டா அமெரிக்கா போக மாட்ட என்று சொல்கிறான். 

உடனே சௌந்தரபாண்டி துக்கத்தில் இருந்து அலண்டு எழுந்து கொள்ள இது அவருடைய கனவு என தெரிய வருகிறது, உடனே பரணிக்கு போன் செய்து எங்க இருக்க என்று விசாரிக்க அவள் ஹோட்டலில் இருப்பதாகவும் சண்முகம் வெளியே சென்றிருப்பதாகவும் சொல்கிறாள். 

இதையும் படிங்க: மன்னிப்பு கேட்ட சண்முகம்.. பரணி செய்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!

சௌந்தரபாண்டி அவன் அங்க வந்ததே உன்னை கர்ப்பமாக்க தான்.. அப்படி நீ கர்ப்பமாகிட்டா அமெரிக்கா போக முடியாது என்று சொல்ல பரணி அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து சண்முகம் மல்லிகை பூவுடன் வர பரணி அவனிடம் கோபப்படுகிறாள். 

நீ அதுக்காக தானே வந்திருக்க என ஆவேசப்பட சண்முகம் புரியாமல் நிற்கிறான். தனியா வந்த எனக்கு தனியாவே ஊருக்கு வர தெரியும்.. நீ கிளம்பு என சொல்ல சண்முகம் முதலில் ஊருக்கு கிளம்புகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

இதையும் படிங்க: சண்முகம், சௌந்தரபாண்டி இடையே உருவாகும் மோதல்! பரணி எடுத்த முடிவு - அண்ணா சீரியல் இன்றைய அப்டேட்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share