×
 

‘நீங்கள் இந்தியர் இல்லையா..?’ ஒரே ஒரு ட்வீட்டால் நொந்து தவிக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி..!

'தெலுங்கர்களுக்கும், மற்ற இந்தியர்களுக்கும் இடையே ஏன் பாகுபாடு? தெலுங்கு மக்கள் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா?

பத்ம விருதுகளால் கௌரவிக்கப்படவுள்ள ஆளுமைகளின் பெயர்களை இந்திய அரசு சமீபத்தில் வெளியிட்டது. இதனை தொடர்ந்து, பிரபல இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி ஒரு பதிவைப் பகிர்ந்து கொண்டதை பலரும் ட்ரோலிங் செய்து வருகின்றனர். அந்தப்பதிவில்,பத்ம விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தார். இந்தப் பதிவைப் பார்த்ததும், பல பயனர்கள் கோபமடைந்து, தெலுங்கு மக்கள் இந்தியர்கள் இல்லையா? என்று அவரிடம் கேட்கத் தொடங்கினர்.

அவரது பதிவில், 'இந்த முறை தெலுங்கு மக்களுக்கு 7 பத்ம விருதுகள்... பத்ம பூஷண் விருது பெற்ற நந்தமுரி பாலகிருஷ்ணா காருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.' இந்திய சினிமாவில் உங்கள் பயணம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது. அனைத்து புகழ்பெற்ற தெலுங்கு, பிற இந்திய பத்ம விருது வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

இதன் பிறகு பத்ம பூஷண் விருதைப் பெற்றதற்காக சேகர் கபூரை ராஜமௌலி ட்வீட் செய்து பாராட்டினார். ‘‘இது தனக்கு உண்மையிலேயே தகுதியான அங்கீகாரம்’’ என்று மகிழ்ச்சி கூறினார். ராஜமவுலி அஜித் குமாரையும் வாழ்த்தினார்.

இதையும் படிங்க: சைஃப் அலி கான் மீது தாக்குதல்: 100 சதவீதம் பொருந்தாத குற்றம் சாட்டப்பட்ட ஷரிஃபுலின் கை ரேகைகள்..! உண்மை குற்றவாளி யார்..?

இதனால் ராஜமௌலி இப்போது நெட்டிசன்களின் இலக்காகிவிட்டார்.  ‘‘வடக்கு-தெற்கு என்பது அரசியல் விவாதம் அல்ல. உங்களைப் போன்ற மிகச் சிலரே பின்பற்றும் ஒரு சித்தாந்தம்.' வடக்கத்திய மக்கள் உங்கள் படத்திற்காக ஏன் உங்களை ஆதரிக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை, நாங்கள் இந்தியர்கள் என்று சொல்ல மக்களுக்கு தைரியம் இல்லை’’ என்று ஒருவர் கடுமையாகத் தாக்கினார். மற்றொருவர், 'தெலுங்கர்களுக்கும், மற்ற இந்தியர்களுக்கும் இடையே ஏன் பாகுபாடு? தெலுங்கு மக்கள் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? நீங்கள் தெலுங்கு, இந்தியை பிரித்துப் பார்க்கிறீர்கள்...' எல்லோரும் இந்தியர்களே’’ என ரஜமவுலியை குறி வைத்து தாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: எல்லை மீறிய அழகு! பட்டு புடவை கட்டி இளசுகள் தூக்கத்தை கெடுக்கும் பிரியங்கா மோகன்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share