×
 

நேற்று அப்பா ஸ்டாலின்… இன்று மகன் உதயநிதி … கவிதை 'சுட்டும்' கலைஞரின் வாரிசுகள்..!

இங்கே தமிழ் மொழி வாழ்க என்று முழங்குகிறீர்கள். அங்கே உங்கள் சன் டிவியின் ராமாயணம், மகாபாரதம், ஆரிய, இந்துமத நம்பிக்கைகளை  ஒளிபரப்பி,  மறைமுகமாக இந்து மதப்பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிக்கப்பட்டு வருவதாக பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் காலக்கட்டத்தில் இருந்தே, பெரும் சர்ச்சையை கிளம்பி வருகிறது. இந்நிலையில், சமீப காலமாக மும்மொழி கொள்கை என்கிற திட்டத்தின் கீழ் பள்ளி கல்வியில், இந்தி மொழியை திணிக்க, பாஜக முயற்சித்து வருவதாகவும், அதற்காக கல்வி நிதியை மத்திய அரசு மறுத்து வருவதாகவும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு, முன்பு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ''தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொள்ளாவிட்டால் நிதி அளிக்க முடியாது'' என்று கூறியிருந்தார்.

இந்தத் தகவல் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் கடும் எதிர்வினையாற்றி வருகின்றனர்.ஏற்கனவே இருமொழி கொள்கை அமலில் இருக்கும் நிலையில், மும்மொழி கொள்கை எதற்கு என்றும், இந்த மும்மொழி கொள்கை மூலம் பாஜக அரசு இந்தியை தமிழகத்தில் திணிக்க பார்க்கிறது என்ற குற்றச்சாட்டும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு புதிய பட்டப்பெயர் சூட்டிய எடப்பாடியார்… விஜய்க்கு கொடுத்த சமிக்ஞை..!

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின், பாரதிதாசன் கவிதையை மேற்கோள்காட்டி தனது எக்ஸதளப்பதிவில், ''இன்பத்திராவிடத்தில் இந்திமொழியே - நீ. இட்ட அடி வெட்டப்படும் இந்திமொழியே.. துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே.. உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே... அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும். நல் அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில், உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?'' எனப் பதிவிட்டு தம் தமிழ் உணர்ச்சியை வெளிப்படுத்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பைக் காட்டி இருந்தார்.

அதேபோல், இன்று தமிழக துணை முதலமைச்சரும், மு.க.ஸ்டாலினின் மகனுமாகிய உதயநிதி ஸ்டாலின் அதே பாரதிதாசன் கவிதையை மேற்கோள் காட்டி தனது எக்ஸ்தளப்பதிவில், ''தாய்மொழி என்பது வெறும் தொடர்புக்குதவும் கருவி மட்டுமல்ல. ஓர் இனத்தின் அடையாளம், பண்பாடு, வரலாற்றின் அடித்தளம்.தமிழைக் காக்க வேண்டும் என்ற நம் உணர்வுக்கும், இந்தியைத் திணிக்க வேண்டும் எனும் பாசிச சூழ்ச்சிக்கும் இதுவே அடிப்படை. 

தமிழை வீழ்த்த வந்த சூழ்ச்சிகளை எல்லாம் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டாக தமிழ்நாடு வீழ்த்தியே வந்திருக்கிறது. இனியும் வீழ்த்தும்."எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே " - எனும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப ஒன்றுபட்டு நம் தமிழ் காப்போம்'' என தம் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தி மத்திய அரசுகு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள எதிர்த் தரப்பினர், ''இங்கே தமிழ் மொழி வாழ்க என்று முழங்குகிறீர்கள். அங்கே உங்கள் சன் டிவியின் ராமாயணம், மகாபாரதம், ஆரிய, இந்துமத நம்பிக்கைகளை  ஒளிபரப்பி,  மறைமுகமாக இந்து மதப்பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறீர்கள். ஏன் இதுவரை தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்றவர்களின் வாழ்க்கை திரைக் காவியம் வரவில்லை?''  எனப் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
 

இதையும் படிங்க: கபளீகரம் செய்யும் அண்ணாமலை... பாஜகவில் டென்ஷன்... ஒரே மோடுக்கு வந்த ஸ்டாலின்- எடப்பாடியார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share