டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை! ஆயுஷ் மான் பாரத் திட்டத்தில் டெல்லி அரசு சேர முடியாது
பிரதமர் ஆயுஷ்மான் காப்பீடுத் திட்டத்தில் டெல்லி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது
இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு மற்றும் டெல்லி அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர். காவே, அகஸ்டின் ஜார்ஜ் மஷி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.
மத்திய அ ரசின் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தில் டெல்லி அரசு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யக் கோரி கடந்த 2024, டிசம்பர் 24ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்தது.
டெல்லி ஆம் ஆத்மி அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்கி ஆஜராகினார். அவர் வாதிடுகையில் “ மத்திய அரசின் காப்பீடு திட்டத்தில் சேர வேண்டும் என்று டெல்லி அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் எப்படி கட்டாயப்படுத்த முடியும், இது அரசின் கொள்கை முடிவு. இதில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது” என வாதிட்டார்./
இதையும் படிங்க: ஆளுநர் ஆர்.என், ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு.. வேகம் காட்டும் திமுக அரசு!
கடந்த டிசம்பர் 24ம் தேதி டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் “ டெல்லி மக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பிரதமர் ஆயுஷ்மான் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், அரசின் நிதிதேவையில்லை, வசதிகள் தேவையில்லை எனக் கூற முடியாது. நாட்டில் 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. 2025, ஜனவரி 5ம் தேதிக்குள் டெல்லி அரசின் சுகாதாரத்துறையும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது
இதையும் படிங்க: நீதிமன்றங்களில் ஆண், பெண், மாற்றுத்திறனாளிகளுக்கு தனித்தனி கழிவறை அவசியம்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு...