'ஆம் ஆத்மி' வீழ்ச்சிக்கு காரணமான ஸ்வாதி மாலிவால்: டெல்லி புதிய முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து!
முதல்வர் பதவியேற்பு விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் கலந்துகொண்டு முதல்வர் ரேகா குப்தாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
முதல்வராக பாஜகவின் ரேகா குப்தா பதவியேற்கும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வருகைதந்துள்ளார். முதல்வராக பதவி ஏற்பதற்கு முன்பாகரேகா குப்தாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் தன்னை தாக்கியதாக குற்றச்சாட்டை எழுப்பிய ஸ்வாதி மாலிவால், அக்கட்சியின் தலைவர்களுக்கு எதிரான கருத்துகளை சமீபகாலமாக வெளியிட்டு வந்தார். நடந்து முடிந்தசட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆணவம்தான் காரணம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க: பெண்ணுக்குத் தவறு செய்தால் கடவுள் நிச்சயம் தண்டிப்பார்..! கேஜ்ரிவால் குறித்து சுவாதி மாலிவால் பேட்டி
இதனிடையே, ஆம் ஆத்மியின் தோல்விக்கு கட்சிக்கு எதிராக ஸ்வாதி மாலிவால் போர்க்கொடி தூக்கியதே காரணம் என்றும், அவருக்கு பாஜக அமைச்சரவையில் பதவி வழங்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கருத்துகள் எழுந்துள்ளது.
இதற்கிடையில் சுவாதி மலிவால்
தலித் எதிர்ப்பு சக்தி தலைவர் கெஜ்ரிவாலுக்கு வலியுறுத்தல்
டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்வாதி மாலிவால் கோரிக்கை வைத்துள்ளார்.
டெல்லியில் கடந்த 10 ஆண்டுகளாக ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்றது. சமீபத்தில் நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அம்மாவை வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது
இந்நிலையில், அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு, அக்கட்சியின் அதிருப்தி தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஸ்வாதி மாலிவால் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் தலித சமுதாயத்தைச் சேர்ந்தவர் முதல்வராக நியமிக்கப்படுவார் என கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்தார். ஆனால் அந்த வாக்குறுதி இதுவரை நிறைவேற்றப் படவில்லை. இந்த முறையாவது தலித் எம்எல்ஏ ஒருவரை டெல்லி சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக நியமித்து பாபாசாஹிப் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவீர்கள் என நம்புகிறேன். சமூக நீதியை நிலைநாட்ட வேண்டும் என்ற ஆம் ஆத்மியின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படியாக இந்த நடவடிக்கை அமையும்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஜகவின் தேர்தல்
வாக்குறுதிகள்
பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகள் சுட்டிக் காட்டப்பட்டு உள்ளன புதிய முதல்வர் ரேகா குப்தா அந்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் பணியில் தற்போது ஈடுபட்டு வருகிறார். பாஜக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளை சேர்ந்த சுவராஜ் ஷீலா திருச்சி மற்றும் அதிசி ஆகியோரின் தலைமையைத் தொடர்ந்து நான்காவது பெண்மணியாக தற்போது முதல்வர் பதவியை அலங்கரிக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றவுடன் தேசிய தலைநகரை வழிநடத்தி அதன் மக்கள் எதிர் கொள்ளும் அழுத்தமான பிரச்சிசனைகளை தீர்க்க பாடுபட்டு வருவதால் அனைவருடைய பார்வையும் தற்போது குப்தாவின் மீது திரும்பி இருக்கிறது.
இதையும் படிங்க: கேஜ்ரிவாலை அதிரவைத்த ஸ்வாதி மாலிவால்..! பதவி கொடுத்தவருக்கே ஆப்பு...