தூக்கில் தொங்கத் தயார்..! மும்மொழிக் கொள்கைகக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என திமுக நிரூபிக்குமா? திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசம்
மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையொப்பமிடவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபித்துவிட்டால் தான் தூக்கில் தொங்க தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.
மும்மொழிக் கொள்கையை ஆதரித்து கையொப்பமிடவில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் நிரூபித்துவிட்டால் தான் தூக்கில் தொங்க தயார் என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சவால் விடுத்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழக அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
இதையும் படிங்க: தமிழகம் பெரிய பாதிப்பை சந்திக்கும்... திமுக அரசை எச்சரித்த இன்போசிஸ் முன்னாள் அதிகாரி..!
அப்போது பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களை ஏமாற்றும் விதமாக தற்போது மும்மொழிக் கொள்கைக்கு எதிராக போராட்டம் நடத்தும் நாடக்தை மக்கள் புரிந்து கொள்வார்கள். கடந்த ஆண்டு மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக தலைமைச் செயலகத்தில் தனது உதவியாளரை வைத்து ஆதரவு தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தற்போது கபட நாடகம் ஆடி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்த கடிதம் தற்போது மத்திய அரசிடமும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியிடமும் உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இதனை திமுக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் யாரும் மறுக்க முடியாது இல்லை என்று மறுத்தால்; தூக்கில் தொங்க தயார். அதேசமயம் தமிழக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் நாங்களும் இந்தியை படிக்க வேண்டாம் என்று கூறவில்லை. இந்தியை திணிக்க வேண்டாம் என்றுதான் கூறி வருகிறோம். மும்மொழிக் கொள்கை எங்களுக்கு வேண்டாம். இந்தி படிப்பவர்கள் எங்களுக்கு எதிரி கிடையாது எனக்கூறினார்.
இதையும் படிங்க: முதலமைச்சர், அமைச்சர் படம் எங்கே? திமுக, அதிமுக நிர்வாகிகள் மோதல்.. பூமி பூஜையில் கைகலப்பு..!