×
 

‘தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் அல்ல’.. சர்ச்சையை கிளப்பிய ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்..!

தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் அல்ல என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன்.

தமிழ்நாட்டை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினர், தமிழர்கள் யாரும் உருவாக்கவில்லை, பிரிவினைவாத சக்திகள் இன்னும் தமிழகம், பஞ்சாப்பில் மட்டும்தான் வேறுபட்ட வழியில் செயல்பாட்டில் உள்ளன என்று மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகத்தை சேர்ந்த ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவின் மூத்த தலைவர் சிபி ராதாகிருஷ்ணன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்எஸ்எஸ் நிறுவனர் தலைவர் “ஹெட்ஜ்வார்-உறுதியான வாழ்க்கை வரலாறு” என்ற நூல் மும்பை ஆளுநர் மாளிகையில் நேற்று வெளியிடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன், சர்வதேச நிலைத்தன்மை மையத்தின் இயக்குநர் நூலின் ஆசிரியர் பிரிட்டன் இந்தியர் சச்சின் நந்தா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: தொகுதி மறுவரையறை விவகாரம்.. கோடு போட்ட ஸ்டாலின்.. ரோடு போடும் ரேவந்த் ரெட்டி..!!

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு தத்துவத்தை ஆர்எஸ்எஸ் நிறுவனர் டாக்டர் கே.பி. ஹெட்கேவார் முன்மொழிந்தார் அது இன்று பொருத்தமாக இருக்கிறது. பிரிவினைவாத சக்திகள் இன்னும் பஞ்சாப், தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளன. பஞ்சாப்பைவிட சற்று வேறுபட்டு ஆயுதங்கள் இல்லாமல் தமிழகத்தில் இருக்கிறார்கள், ஆனால், அவர்களின் வார்த்தைகளே ஆயுதங்களாகி இளைஞர்களை தவறாகவழிநடத்துகிறார்கள்.

இந்தியா ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது என்பது கட்டுக்கதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே இந்தியா செயல்பாட்டு ரீதியாகவும் பாரம்பரியமாகவும் ஒன்றுபட்டிருந்தது. பிரிவினை பற்றி பேசுவோருக்கு வரலாறு தெரியாது, அசோகப் பேரரரசர் தமிழகத்துக்கு படையெடுப்பு நடத்தியுள்ளார். உண்மை நிலவரத்தைப் பற்றி நான் வாதங்களை வைக்கிறேன், இந்தியா என்பது அரசியல் செய்வதற்காக, நிர்வாகத்துக்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. ஆனால் செயல்பாட்டு ரீதியாகவும் பாரம்பரியமாகவும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு முன்பே நாம் ஒன்றாக இருந்தோம்.

தமிழகமும் பல்வேறு பிரிவுகளாக பிரிந்திருந்தது, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் என்றும், கொங்குநாடு மன்னர்கள் என்றும் பிரிந்திருந்தது. சமன மதம் பிறந்தபின் மூன்றில் இரு பங்கு தமிழர்கள் அந்த மதத்தை பின்பற்றினர். இப்போது 40ஆயிரம் தமிழ் சமனர்கள்ன் உள்ளனர். இது வேறு கதை.

சமன மதம் பரவியபோது, அது தானாகவே பரப்பிக்கொண்டது. பெளத்த மதமும் தமிழகத்தில் பரவலாக பின்பற்றப்பட்டது. தமிழகத்தை அரசியல்ரீதியாக உருவாக்கியது ஆங்கிலேயர்கள்தான் என்பதை தெளிவாகக் கூறுகிறேன். தமிழர்கள் யாரும் தமிழ்நாட்டை உருவாக்கவில்லை.

வரலாற்று ரீதியாக தமிழகம் சேர, சோழ, பாண்டிய கொங்கு தேசமாக பிரிந்து கிடந்தது. இப்போது நாம் அதுபோல பிரிவினையோடு செயல்பட்டால், டவுன் பஸ்ஸில் சென்றால்கூட நாம் நம்முடைய பாஸ்போர்ட்டை காண்பிக்க வேண்டும். இதுதான் உண்மை நிலவரம்.

இதுபோன்ற பிரிவினைகள், இந்தியாவின நிலைத்தன்மையைக் குலைத்துவிடும். இன்னும் எதனை பிரிவுகள் உருவாக்குவோம். மகாராஷ்டிராவில் விதர்பா, கொங்கன், மாரத்வாடா என்று பிரிவுகள் உள்ளன. இப்படியே நாம் பிரித்துக்கொண்டால், நம்முடைய தேவைகளை யார் கேட்டுப் பெறும் சக்தி பெறுவது. நாம் ஒருங்கிணைந்த இந்தியாவுக்காக நிற்க வேண்டும், சர்வதேச அரங்கில் நம்முடைய நலனை உறுதி செய்ய வேண்டும். 

நாம் ஐரோப்பாவில் உள்ள சிறியநாடாக இருந்தால், நமக்கு அதேபேரம் பேசும் சக்தி இருக்காது. ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்ததால்தான் மற்றவர்களுக்காக வாழத்தொடங்கினேன் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார். இது மிகப்பெரிய தத்துவம், ஊக்கத்தை ஹெட்கேவர் விதைத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு சிபி ராதாகிருஷ்ணன் பேசினார்.

இதையும் படிங்க: 2026க்குப் பிறகு திமுக ஆட்சி இருக்குமா.? அது அரசு ஊழியர்கள் கையில்.. சத்துணவு சங்க ஊழியர் சங்கம் அதிரடி!.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share