×
 

விடை பெறும் காங்கிரஸ்! 50 ஆண்டுகளுக்குப்பின் அக்பர் சாலையிலிருந்து கோட்லா சாலைக்கு மாற்றம்..

காங்கிரஸ் கட்சி வரும் 15ம் தேதி புதிய முகவரிக்கு கட்சியின் அலுவலகத்தை மாற்றுகிறது.

24, அக்பர் சாலை, புது டெல்லி, இந்த முகவரி அல்ல கடந்த 50 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் அடையாளம்.
இந்த முகவரியைச் சொன்னாலே இது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் என காங்கிரஸ் தொண்டர்களுக்குப் புரிந்துவிடும். அந்த அளவுக்கு இந்த முகவரியோடு அவர்கள் ஒன்றிணைந்துவிட்டனர்.
ஆனால், கடந்த 50 ஆண்டுகளாக இதே முகவரியில் தலைமை அலுவலகத்தை நடத்தி, கட்சியையும், ஆட்சியையும் நடத்திய காங்கிரஸ் கட்சி வரும் 15ம் தேதி புதிய முகவரிக்கு கட்சியின் அலுவலகத்தை மாற்றுகிறது.
கோட்லா சாலையில் புதிதாக கட்டப்பட்ட சொந்த கட்சியின் அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சி தனது தலைமை அலுவலகத்தை மாற்ற உள்ளது. கடந்த 50 ஆண்டுகாலத்தில் இந்த அக்பர் சாலையில் அமைந்துள்ள வெள்ளை நிற மாளிகையில் ஏராளமான வரலாற்று சம்பவங்கள் நடந்துள்ளன. அனைத்தையும் சமந்து,இந்த அலுவகத்திலிருந்து காங்கிரஸ் கட்சி விடைபெறுகிறது.


1980ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது, இந்திரா காந்தி சுட்டுக் கொலை, ராஜீவ் காந்தி பிரதமராக 1984ம் ஆண்டு பதவி ஏற்றது, பின்னர் காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோற்றது, பி.வி. நரசிம்மராவ் ஆட்சிக் காலம், மீண்டும் காங்கிரஸ் கட்சியின் சரிவு, சோனியா காந்தியின் அரசியல் பிரவேசம், அவரின் தலைமை, காங்கிரஸின் 10 ஆண்டுகால ஆட்சி, அதன் ஏற்பட்ட ஏற்ற, இறக்கங்கள் என அனைத்தையும் அக்பர் சாலையில் அமைந்துள்ள இந்த அலுவலகம் கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கால் 2009ம் ஆண்டு டிசம்பரில் புதிய கட்சி அலுவலகத்துக்கு 9ஏ கோட்லா சாலையில் அடிக்கல் நாட்டியது.  ஏறக்குறைய 15 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் படிப்படியாக கட்டப்பட்டு முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு தயாராகியுள்ளது.


வரும் 15ம் தேதி காங்கிரஸ் கட்சி தனது புதிய தலைமை அலுவலகத்துக்கு தனது செயல்பாடுகள் அனைத்தையும் மாற்றுகிறது. இந்த அலுவலகத்துக்கு “ இந்திரா காந்தி பவன்” என்று காங்கிரஸ் கட்சி பெயரிட்டுள்ளது.
தீன தயாள் உபாத்யா மார்க் பகுதியில் அமைந்துள்ள இந்த அலுவலகத்துக்கு 6 வாயில்களை காங்கிஸ் கட்சி அமைத்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் இந்த புதிய தலைமை அலுவலகத்தை வரும் 15ம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் திறந்து வைக்கின்றனர்.

இதையும் படிங்க: காத்திருக்க முடியாதா? ராகுல் காந்திக்கு பிரணாப் முகர்ஜி மகள் கேள்வி

இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் நாடு முழுவதும் இருந்து 400க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், சிறப்பு உறுப்பினர்கள், காங்கிரஸ் மாநிலத் தலைவர்கள், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்கள், முதல்வர்கள், எம்.பி.க்கள், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் மாநில தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சர்கள் என பலரும் பங்கேற்கிறார்கள்.
அக்பர் சாலையில் உள்ள அலுவலகத்துக்கு கடந்த 1978ம் ஆண்டு இந்திரா காந்தி காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தை மாற்றினார். அவசரகாலத்துக்குப்பின் காங்கிரஸ் கட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்தநிலையில் இந்த அலுவலகத்துக்கு காங்கிரஸ் கட்சி சென்றது. காங்கிரஸ் கட்சி இரு பிரிவாக பிரிந்து இந்திரா குழுவாக இருந்தபோது அதற்கான அலுவலகம் இல்லை. அப்போது எம்.பி. கடாம் வெங்கிடசாமி தனது இல்லத்தை அதாவது 24, அக்பர் சாலையில் உள்ள தனது இல்லத்தை காங்கிரஸ் கட்சிக்கு அலுவலகமாக மாற்ற வழங்கினார். காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தியின் தலைமையில் சொந்த கட்சி அலுவலகத்தை விட்டு வெளியேறியது 2வது முறையாகும், 1969ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி இரண்டாக பிளவுண்டபோது, காங்கிரஸ் கட்சிக்கு சுந்திரத்துக்கு பின் இருந்த 7 ஜந்தர் மந்தர் சாலையில் இருந்த அலுவலகம் வழங்கப்படவில்லை. அங்கிருந்து தற்காலிக அலுவலகத்தில் இந்திரா காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சி இயங்கி, பின்னர் அக்பர் சாலை இல்லத்துக்கு வந்தது.

இதையும் படிங்க: அதிமுகவிற்கு ஆதரவாக களமிறங்கிய காங்கிரஸ் எம்.பி...! ஒற்றை கேள்விக்கே அதிர்ந்து போன திமுக! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share