கழுத்தை நெரித்தக் கடன்; மனைவி, மகளுடன் வெள்ளி வியாபாரி தூக்கு போட்டுத் தற்கொலை!
சேலத்தில் வெள்ளி வியாபாரி பால்ராஜ் கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் மகளுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தில் வெள்ளி வியாபாரி பால்ராஜ் கடன் தொல்லை காரணமாக மனைவி மற்றும் மகளுடன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் அரிசிப்பாளையம் பகுதியில் உள்ள முத்தையால் தெருவில் வசித்து வந்தவர் வெள்ளி வியாபாரி பால்ராஜ் (45). இவருடைய மனைவி ரேகா(38) இவர்களுக்கு 11 ம் வகுப்பு படிக்கும் ஜனனி(16) என்ற மகள் இருந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்கியில் கடன் வாங்கி புதிய வீடு கட்டியுள்ளார்.
இதனிடையே கடந்த ஒரு வருடமாக அவரது தொழிலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல மாதங்களாக வீட்டிற்கான மாதத் தவணையைக் கட்டவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் நேற்று வீட்டிற்கு வந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக பணத்தைக் கட்டும்படி வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: "திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதை தற்கொலைக்கு தூண்டுவதாகக் கருத முடியாது" ! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ஏற்கனவே தொழில் நஷ்டமடைந்ததால் மன உளைச்சலில் இருந்த பால்ராஜ், ஆசை ஆசையாய் கட்டிய வீடூ கடனில் மூழ்குவதைக் கண்டு மனமுடைந்து போயுள்ளார். இதனையடுத்து நேற்றிரவு பால்ராஜ், அவரது மனைவி ரேகா, மகள் ஜனனி ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளப்பட்டி போலீசார் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..
இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை மரணம் ..மகளின் துப்பட்டாவிலேயே தூக்கிட்டு தற்கொலை..!