×
 

போலீசுக்கு விழுந்த அடி! அரைநிர்வாணத்தில் போலீசுடன் தகராறு.. வழக்கறிஞர் கவுன்சில் தலைவர் அட்டூழியம்..

குளித்தலை அருகே மகனுடன் சேர்ந்து போதையில் தகராறில் ஈடுபட்ட மணப்பாறை நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவர்

மணப்பாறை நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவர், மதுபோதையில் தனது மகனுடன் சேர்ந்து தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

திருச்சி மணப்பாறை நீதிமன்ற பார் கவுன்சிலின் தலைவராக இருப்பவர் மோகன்தாஸ். இவர் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில் குளித்தலை பிரிவு ரோடு அருகே உள்ள டீக்கடை முன்பு தனது மகன் தீபனுடன் பேசிக்கொண்டிருந்தார். இருவரும் மதுபோதையில் இருந்த நிலையில், திடீரென ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் பேசிக்கொண்டு தகராறில் ஈடுபட்டனர். மேலும் அரைநிர்வாணத்தில் இருந்த மகன் தீபன், மூடி இருந்த டீக்கடையின் மீது கற்கள் மற்றும் கட்டைகளை வீசி பொருட்களை சேதப்படுத்தி கொண்டிருந்தான். 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் உதவி ஆய்வாளர் தினேஷ் என்பவரின் இருசக்கர வாகனத்தின் மீது கற்களை வீசியுள்ளனர் மோகன்தாஸ் மற்றும் அவரது மகன் தீபன். அதுமட்டுமில்லாமல், காவலர் வினோத் குமார் என்பவரின் தலைக்கவசத்தை உடைத்தும், தடுக்கச் சென்ற தலைமை காவலர் பாஸ்கர் என்பவரின் பின் தலையில் கையால் அடித்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஒருகட்டத்தில் அப்பா, மகனுக்கும் இடையே சண்டை முற்றிப்போக, ஆத்திரமடைந்த தீபன், அப்பாவின் முகம், வயிறு என பாக்சிங் போல குத்துவிட்டான். வலிதாங்க முடியாமல் மோகன் தாஸும் போலீசாரின் லத்தியை பிடுங்கி தீபனை சரமாரியாக வெளுத்து வாங்கினார். 

உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் எவ்வளவோ எடுத்துக் கூறியும், தடுத்தும் அதை காதில் வாங்கிக் கொள்ளாமல் இருவரும் தொடர்ந்து கற்களை வீசி ரகளையில் ஈடுபடவே, ஒரு கட்டத்தில் அவர்களை போலீசார் லத்தியால் அடித்து அந்த இடத்தை விட்டு காலி செய்ய வைத்தனர். 

இதையும் படிங்க: இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை: வெள்ளை மாளிகை மீது தாக்குதல் நடத்த முயற்சி...

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: பலருக்கு விற்கப்பட்ட +1 மாணவி... கொடூரர்கள் கையில் விலங்கு மாட்டிய போலீஸ்... சிக்கியது எப்படி?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share