×
 

ரூ.1000 கோடி சொத்து சேர்த்தாரா..? அண்ணாமலைக்கு பொருந்தும் ‘திமுக ஃபைல்ஸ்’ லாஜிக்..? உருட்டுக்காக உதை வாங்கும் திருச்சி சூர்யா..!

அண்ணாமலை தான் என் தலைவர் என சொல்வதும், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் அவதூறு பரப்புவதும் ஒரு பொழப்பா?

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள சத்திரப்பட்டியில் செந்தில்குமார் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த வாரம் சோதனை நடத்தினர். இவர் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் உறவினர் என விவாதம் எழுந்தது. 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய அண்ணாமலை, ‘‘செந்தில் குமார் என்னுடைய உறவினர்தான். எனது சொந்தக்காரருக்கு அவரது குடும்பத்தில் இருந்து பெண் எடுத்திருக்கிறோம். நானும் செந்தில் பாலாஜியும் கூட பங்காளிகள் தான். ஒரே கோயிலுக்குச் செல்வோம். நானும், ஜோதிமணி அக்காவும் உறவினர்தான். 20 ஆண்டுகளாக அவரைத் தெரியும். அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரின் வீட்டுக்குச் சென்றிருக்கிறேன்... சாப்பிட்டிருக்கிறேன்.

தி.மு.க-வில் கொங்குப் பகுதியில் இருக்கிற எல்லோரும் ஏதோவொரு வகையில் உறவினர்தான். நானும், கரூர் அ.தி.மு.க விஜய பாஸ்கரும் பங்காளிகள். கோவையில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டவர்கள் பாதி பேர் எனது உறவினர்கள்தான். சோதனை நடந்தது என்னுடைய குடும்பமா? என் ரத்த சொந்தமா? அப்படி இருந்தால் இந்தக் கேள்வி நியாயம்’’ எனத் தெரிவித்து இருந்தார்.

இதையும் படிங்க: இது அபசகுணமாச்சே... 5 அமைச்சர்களை காவு வாங்கிய அரசு பங்களா... குடியேற மறுக்கும் அழுகினி அமைச்சர்..!

இதனையடுத்து பாஜகவில் இருந்து நீக்கட்டப்பட்ட திருச்சி சூர்யா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார் அதில், ‘‘அண்ணன் அண்ணாமலைக்கு வணக்கம்... இன்று உங்களுடைய பிரஸ்மீட் பார்த்தேன், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் செந்தில் பாலாஜி, ஜோதிமணி, விஜயபாஸ்கர் என பதட்டத்தில் உளறினீர்கள். பாவம், உங்களுடைய ரீல் அந்து போய் பல மாசமாச்சு, நாடகம் முடியும் நேரமிது. 

அண்ணாமலை மூன்றே வருடத்தில் பத்து ஆயிரம் கோடி சொத்து சேர்த்துவிட்டார் என முதன்முதலாக நான் சொன்ன போது உங்களிடம் கூலிக்கு வேலை செய்யும் வார்ரூம் ஆட்களும், உங்களுடைய உண்மை முகத்தை உணராத பாஜக தொண்டர்களும் என்னை திட்டி தீர்த்தார்கள். இன்று நான் சொன்னது முற்றிலும் உண்மை என பாஜக ஆளும் ஒன்றிய அரசின் வருமான வரித்துறையே உறுதி செய்துள்ளது.

நீங்கள் DMK Files வெளியிட்ட பொழுது பினாமி சொத்துகள் எல்லாம் திமுக அரசியல்வாதிகள் கொள்ளையடித்த சொத்து என கணக்கு சொன்னீர்களே இப்போது அதே லாஜிக் உங்களுக்கும் பொருந்தும் அல்லவா?

உங்களின் ஒரு பினாமி சத்திரபட்டி செந்தில்குமாரிடம் இருந்து மட்டும் ₹10 கோடி ரொக்க பணம், ₹240 கோடி வரி ஏய்ப்பிற்கான ஆதாரம், பல நூறு கோடிகள் சொத்து தொடர்பான ஆவணம் பறிமுதல் செய்துள்ளது ஒன்றிய அரசின் வருமான வரித்துறை.

சரி, ஏழாவது கேள்விக்கு வருவோம். உங்க அக்கா புருஷன் சிவகுமாரும் செந்தில்குமாரும் அண்ணாமலையார் சேம்பர்ஸ் நிறுவனத்தில் கூட்டாளிகளா இல்லையா ? ஊழல் என்றாலே ஊளையிட்டுக் கொண்டு வருவீர்களே 240 கோடி வரியைப்பு என்றால் 800 கோடி சொத்து சேர்த்ததில் 30% சதவீத வரியைப்பு நடந்துள்ளது கணக்கு சரியா மலை?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தப்பதிவால் ஆத்திரமடைந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் திருச்சி சூர்யாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். ‘‘அடிமைகள் போல அண்ணாமலை ஜி ஒன்றும் மழுப்பவில்லை. என்னுடைய தூரத்து உறவினர் தான் என்று கூறினார். மடியில் கணம் இல்லை.. முடிந்தால் வழக்கு போட்டு கதறுங்கள் ஏன் இந்த வன்மம்?

கட்சியில் இருக்கும் வரை அண்ணாமலை தான் என் தலைவர் என சொல்வதும், கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதும் அவதூறு பரப்புவதும் ஒரு பொழப்பா?

அண்ணாமலை அவர்கள் அரசியலுக்கு வருவதற்கு முன்பாகவே அவருடைய உறவினர் சிவக்குமார் அவர் தொழில் அதிபர். அண்ணாமலை அவர்கள் என்ன திமுகவின் மந்திரியா இல்லை,. மக்கள் வரிப்பணத்தில் ஏதேனும் டெண்டர் எடுத்தாரா? முட்டாள்தனமாக உளறிக் கொண்டு இருக்காதே’’ என பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: அதே இடம்... அதே சுவரு... டைம் இல்ல தலீவா..! விஜயின் ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியலால் அலறல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share