பொதுத் தேர்வு எழுத சென்ற மாணவன்..! பட்டப் பகலில் அறிவாளால் வெட்டப்பட்ட கொடூரம்..!
ஶ்ரீவைகுண்டத்தில் 11 ஆம் வகுப்பு மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதச் சென்ற மாணவரை அறிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் அரியநாயகிபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் திருநெல்வேலியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் இன்று பொதுத்தேர்வு எழுதுவதற்காக தனது கிராமத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி பேருந்தில் பயணம் மேற்கொண்டுள்ளார் தேவேந்திரன். அப்போது, கெட்டியம்மாள்புரம் அருகே பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது 3 பேர் பேருந்தை வழிமறித்து உள்ளனர்.
இதையும் படிங்க: தேர்வன்று திடீரென உயிரிழந்த தாய்.. மனதை ரணமாக்கிய மாணவனின் செயல்..!
மாணவர் தேவேந்திரனை பேருந்தில் இருந்து இழுத்து வெளியில் தள்ளியுள்ளனர். பின்னர் கையில் வைத்திருந்த அரிவாளால் தேவேந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளனர். பேருந்தில் இருந்த பயணிகள் கூச்சலிடவே அந்த கும்பல் தப்பி ஓடியுள்ளது.
பின்னர் தேவேந்திரனை மீட்டு ஸ்ரீவைகுண்டம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் திருநெல்வேலியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கபடி விளையாடுவதில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக மாணவனை வெட்டி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 சிறார்களை போலீசார் கைது சேட்டு விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்கள் பலியாகும்... கதறும் பெற்றோர்!!