×
 

அந்த வார்த்தையைக் கூட சொல்ல மாட்டேன்... கெத்து காட்டிய விஜய்... திமுகவுக்கே டப் கொடுத்த தருணம்...! 

இந்நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பேசிய விஜய், இந்தி என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல் பேசியிருப்பது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. 

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் மும்மொழி கொள்கைக்கு எதிராக பேசிய விஜய், இந்தி என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தாமல் பேசியிருப்பது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. 

சென்னை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், பிரச்சனை ஒன்னு கிளப்பி விட்டுட்டு இருக்காங்க மும்மொழிக் கொள்கை. இதை வந்து இங்க செயல்படுத்தலைன்னா இந்த கல்விக்கான நிதியை வந்து நம்மளுடைய மாநில அரசுக்கு கொடுக்க மாட்டாங்களாம். இந்த எல் கேஜி யுகேஜி பசங்க சண்டை போட்டுப்பாங்க தெரியுமா? சண்டை போடுறாங்க. அந்த மாதிரி கொடுக்க வேண்டியது அவங்களுடைய கடமை, இங்க இவங்க வாங்க வேண்டியது இவங்களுடைய உரிமை ஆனா இவங்க ரெண்டு பேரும் இங்க எவ்வளவு சீரியஸா ஒரு பிரச்சனை ஓடிட்டு இருக்கு. 

 

ரெண்டு பேரும் பேசி வச்சுக்கிட்டு இந்த செட்டிங் எல்லாம் பண்ணி வச்சுக்கிட்டு மாத்தி மாத்தி சோசியல் மீடியாவுல ஹாஷ்டேக் போட்டு விளையாட்டு இருக்காங்க. இங்க என்ன நடந்துகிட்டு இருக்கு, அதாவது இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிற மாதிரி அடிச்சுப்பாங்களாம். அதை வந்து நாங்க நம்பனுமா. இதுக்கு நடுவுல நம்ம பசங்க உள்ள பூந்து அங்க ஒரு சம்பவம் ஒன்னு பண்ணிட்டு டக்குனு வெளிய வந்துறது டிவி கே பார் டிஎன் அப்படின்னு சொல்லி, யார் சார் நீங்களா எங்க சார் இருக்கிறீங்க ஸ்லீப்பர் செல்ஸ் மாதிரி. 

இதையும் படிங்க: 'மனசிலாயோ...' விஜய் வீட்டிற்கு செருப்பை வீசி மெசேஜ் கொடுத்த மலப்புரம் மணி..!

அதனால இதெல்லாம் மக்களுக்கு நாம சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமே கிடையாது அவங்களுக்கே தெரியுதெல்லாம் எவ்வளவு பெரிய ஒரு ஏமாத்து வேலைன்னு. நம்ம ஊரு சுயமரியாதை ஊரு. நாம எல்லாரையும் மதிப்போம், ஆனா சுயமரியாதையை மட்டும் யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டோம்.

நாம எல்லா மொழிகளையும் மதிப்போம் அதுல மாற்றுக் கருத்தே கிடையாது தனிப்பட்ட முறையில யார் வேணாலும், எந்த ஸ்கூல்ல வேணாலும் படிக்கலாங்க. உனக்கு எந்த மொழி வேணுமோ, எப்ப கத்துக்கணுமோ, உனக்கு எப்போ தோணுதோ கத்துக்கலாம். அதுல அவங்க அவங்களுடைய தனிப்பட்ட ஒரு உரிமை. ஆனால் கூட்டாட்சி தத்துவத்தை மீறி மாநில தன்னாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை கல்விக் கொள்கையை கேள்விக்குறியாக்கி வேறு ஒரு மொழியை வலுக்கட்டாயமாக திணிச்சா... அதுவும் அரசியல் ரீதியாக திணிச்சா எப்படி ப்ரோ?. அதனால நம்மளுடைய தமிழக வெற்றிக் கழகம் சார்பாக நாமளும் இந்த பொய் பிரச்சாரங்களை எல்லாம் புறம் தள்ளிவிட்டு இதை நாங்கள் உறுதியாக எதிர்ப்போம் எனத் தெரிவித்தார். 

இதில் இந்தி என்ற வார்த்தையை எங்குமே விஜய் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுக மும்மொழிக் கொள்கையை இந்தி திணிப்பு என மடைமாற்றிக் கொண்டிருக்கும் நிலையில், தமிழ், ஆங்கிலமே போதும் மூன்றாவதாக ஒரு மொழி தேவையில்லை என்பதை எந்த மொழி மீதும் வெறுப்பைக் கொட்டாமல் விஜய் சுட்டிக்காட்டியிருப்பது பாராட்டைக் குவித்து வருகிறது. 
 

இதையும் படிங்க: விழாவில் விஜய் போட்ட சாப்பாட்டு இலை இதுதான்... 'வாட் இஸ் திஸ் ப்ரோ..?'- கொதிக்கும் தொண்டர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share