×
 

சவுக்கு சங்கர் வீடு தாக்குதல் விவகாரம்.. திமுக மீது களங்கம் ஏற்படுத்த சதி.. திருமாவளவன் ஆதங்கம்!!

திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தவே சவுக்கு சங்கர் வீடு மீது இழிசெயல் நடந்துள்ளது என  விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருமாவளவன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,"சவுக்கு சங்கரின் இல்லத்தில் நுழைந்து அவரது தாயாரை அச்சுறுத்தியதுடன், அங்கே மனிதக் கழிவு உள்ளிட்ட சாக்கடை கழிவுகளைக் கொட்டியுள்ள குரூரச் செயல் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தூய்மைப் பணியாளர்களைச் சவுக்கு சங்கர் இழிவுப்படுத்திப் பேசியதால்தான், அதன் எதிர்வினையாக இது நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது.

எனினும், இது அநாகரித்தின் உச்சம். அருவருப்பான இந்த நடவடிக்கைகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதாகவே இந்த இழிசெயல் அமைந்துள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு இதில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்”என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 'அந்த என்கவுண்டர்... ஆம்ஸ்ட்ராங் கொலையில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு..?' - சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு

இதேபோல தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், அவருடைய தாயார் தனியாக இருந்துள்ளார். அப்போது, சிலர் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, வீடு முழுக்கச் சாக்கடையையும் மலத்தையும் கொட்டிவிட்டு, மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளனர். ஒருவரின் விமர்சனம் ஏற்புடையதாக இல்லையென்றால், அதைச் சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும்.



அதை விடுத்து, விமர்சனம் செய்தவரின் வயது முதிர்ந்த தாய் இருக்கும் இடத்தில் இப்படி அராஜகம் செய்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இந்த இழிவான செயலைச் செய்தது யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சவுக்கு சங்கர் வீடு மலம் வீசி தாக்குதல்.. வழக்கை விசாரிக்கும் சிபிசிஐடி.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share