×
 

ஊடக விளம்பரத்துக்கு தான் விஜய் திமுகவை குறை சொல்றாரு... கே.என்.நேரு பதிலடி..!

ஊடகத்தில் விளம்பரம் தேடவே திமுகவை விஜய் குறை கூறி வருவதாக அமைச்சர் கே என் நேரு பதிலடி கொடுத்துள்ளார்.

இன்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினரும் பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், மகளிர் தினத்தை ஒட்டி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், பாதுகாப்பாக இருந்தால் தானே சந்தோஷத்தை உணர முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது எனக்கு உரிய விஜய், திமுக அரசு நம்மை ஏமாற்றி விட்டதாக வெளிப்படையாகவே பேசி இருந்தார். 

மேலும் அவர்களை அகற்றுவோம் 2026 இல் மாற்றத்தை ஏற்படுத்தி மகளிருக்கான பாதுகாப்பை உறுதி செய்வோம் என பேசி இருந்தார். 

இதையும் படிங்க: கட்சி கொடியும் இல்ல, கட்சி பேரும் இல்ல, அரசியலும் பேசல... இஃப்தாரில் விஜய்யை கவனிச்சீங்களா?

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற கருத்தை ஆணித்தரமாக தனது வீடியோவில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் விஜயின் பேச்சுக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலடி கொடுத்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஊடக விளம்பரத்திற்காகவே திமுகவை விஜய் குறை கூறி வருவதாக விமர்சித்தார்.

தமிழ்நாட்டில் நடப்பது பெண்களுக்கான ஆட்சி மற்றும் பெண்களை பாதுகாப்பதற்கான ஆட்சி என கூறினார்.

இதையும் படிங்க: எங்கள் கூப்பிட்டு வச்சி அசிங்கப்படுத்துறீங்களா?... தவெகவினர் இஸ்லாமியர்கள் இடையே கடும் வாக்குவாதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share