×
 

தவெகவின் உலகமகா உருட்டு..! சைவ சோற்றில் அரசியல் குறியீடு..? விஜய் உணர்த்துவது என்ன..?

பொதுக்குழுவுல செயலாளர்கள் மட்டும்தான் பங்கேற்பாங்களா? பணத்தை மிச்சப்படுத்தவும், 'பி' டீம் என்பதாலும்தான் அசைவ உணவை தவிர்க்கறீங்க.

தவெக நிகழ்ச்சிகளில் திட்டமிட்டே  தவிர்க்கப்படுகிறதா அசைவ உணவுகள்? தவெக கட்சி நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி என அனைத்திலும் சைவம் மட்டுமே பரிமாறப்படுகிறது. இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிலும்.. சைவம்தான். பொதுக்குழு கூட்டத்திலும் சைவம்தான். மற்ற கட்சிகள் பெரும்பாலும் சைவம், அசைவம் என இரண்டையும் பரிமாறுவது வழக்கம்.

 

நிகழ்ச்சியில் கலந்து கொள்வோரில் எத்தனை பேர் சைவம், எத்தனை பேர் அசைவ உணவை விரும்புகிறார்கள் எனும் பட்டியலை சில தினங்களுக்கு முன்பே தயார் செய்து விடுவார்கள். ரஜினி கட்சி ஆரம்பிக்க போவதாக பரபரப்பை கிளப்பிய காலத்தில்.. தனது ராகவேந்திரா மண்டபத்தில் மதுரை ரசிகர்களை சந்தித்தார். அப்போது 'உங்களுக்கு அசைவ உணவு போட ஆசை. ஆனால் இது சைவ மண்டபம்' எனக்கூறினார்.

இதையும் படிங்க: விஜய்க்கு முழு அதிகாரம்; தவெக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் என்ன?

பக்கத்தில் வேறு மண்டபம் அல்லது வேறு இடத்தை புக் செய்து அவர்களுக்கு அசைவ உணவு பரிமாறுவதில் என்ன பிரச்னை? பல மாவட்டங்களில் இருந்து வந்த  ரசிகர்கள், தொண்டர்களுக்கும் சைவம் மட்டுமே பரிமாறினார் ரஜினி. அப்போது இது சர்ச்சையை கிளப்பியது. அவரைப்போல.. விஜய்யும் பாஜகவின் உணவு முறையை பின்பற்றுவது போல இருக்கிறது.தனது மேலிடத்து உணவுக்கொள்கையை  தவெக தொண்டர்கள் மற்றும் ஊக்கத்தொகை பெற வரும் மாணவர்கள், பெற்றோர் மீது திணிக்கிறாரா விஜய்?'' என அரசியல் விமர்சகர் ரவிவர்மன் கேள்வி எழுப்பி இருந்தார். 


இன்று பொதுக்குழுவிலும் முழுக்க சைவ உணவுதான்‌. இதுகுறித்து நிருபர் கேட்டதற்கு புஸ்ஸி ஆனந்த் சொன்ன வினோதமான பதில், ''நல்ல விசயம் நடக்கறப்ப சைவம் பரிமாறுவது தான் நல்லது. செயலாளர்கள் அனைவரும் சைவம்தான் விரும்புகிறார்கள்'' எனத் தெரிவித்து இருந்தார். 

இதுகுறித்து சினிமா விமர்சகர் ப்ளூசட்டை மாறன் தனது எக்ஸ்தளப்பதிவில்,''என்ன சார் இது உலகமகா உருட்டா இருக்கு? நல்ல விசயம் நடந்தா அசைவம் சாப்பிடக்கூடாதா? செயலாளர்கள் அனைவரும் எப்படி சைவம் தான் வேணும்னு கேப்பாங்க? பொதுக்குழுவுல செயலாளர்கள் மட்டும்தான் பங்கேற்பாங்களா? பணத்தை மிச்சப்படுத்தவும், 'பி' டீம் என்பதாலும்தான் அசைவ உணவை தவிர்க்கறீங்க.

பெரும்பாலான கட்சிகள், சைவம் மற்றும் சைவ உணவுகளை கட்சி நிகழ்ச்சிகளில்  பரிமாறுவதுண்டு. அரிதான சந்தர்ப்பங்களில் மட்டும் ஏதேனும் ஒருவகை உணவு தரப்படலாம். ஆனால் உங்கள் கட்சி நிகழ்ச்சி அனைத்திலும் சைவம் மட்டுமே இருக்கிறது. இந்த அழகில் மற்ற கட்சிகளை பார்த்து ரகசிய கூட்டணி, பெருங்காய கூட்டணி என காமடி வேறு'' என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: புஸ்ஸி ஆனந்திற்கு குழி பறிப்பு... யார் அந்த கறுப்பு ஆடு?... ஈசிஆர் சரவணன் பரபரப்பு பேட்டி...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share