விஜே பிரியங்காவுக்கு நடந்த 2-ஆவது திருமணம்! மாப்பிள்ளைக்கு தான் கொஞ்சம் வயசு அதிகம்!
விஜய் டிவி தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக பிரியங்காவுக்கு மிகவும் எளிமையாக இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது.
விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் திருமண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் அதிக சம்பளம் பெரும் தொகுப்பாளினி தான் பிரியங்கா.
ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க 50,000 முதல் 75,000 வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
இவர் ஒரு ஆங்கராக தன்னுடைய கரியரை துவங்கியது ஜீ தமிழ் என்றாலும், பிரியங்காவை பிரபலப்படுத்தியது விஜய் டிவி தான்.
இதையும் படிங்க: மணிமேகலைக்கு கிடைத்த விருது...! கெத்தாக போஸ்ட் போட்டு அசத்தல்..!
டிடி ஒரு நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்குவார் என்றால்... பிரியங்கா தேஷ்பாண்டே தன்னுடைய ஸ்டைலில் காமெடியாக தொகுத்து வழங்குவார்.
அதே போல் இவரை யார் என்ன சொல்லி கிண்டல் செய்தாலும், அதனை சிரித்து கொண்டே கடந்து செல்வார்.
விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க துவங்கிய சில வருடத்திலேயே தன்னுடைய காதலரான பிரவீன் குமார் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் மிகவும் கிராண்டாக நடந்த நிலையில், விஜய் டிவி பிரபலங்கள் பலர் இதில் கலந்து கொண்டனர்.
திருமணம் ஆன 2 வருடங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ துவங்கினர்.
இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வந்த நிலையில், 2022-ல் விவாகரத்து பெற்றனர். இந்த தகவலை கூட பிரியங்கா மிகவும் தாமதமாகவே அறிவித்தார்.
மேலும் தன்னை தாங்க கூடிய ஒரு கணவர் வேண்டும், நிறைய பிள்ளைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என தன்னுடைய ஆசையை வெளிப்படுத்திய பிரியங்கா தற்போது திடீர் என இரண்டாவது திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரியங்கா திருணம் செய்து கொண்டுள்ள நபரின் பெயர் வசி என்றும் அவர் ஒரு DJ என கூறப்படுகிறது. அதே போல் பிரியங்காவை விட வயதில் மிகவும் மூத்தவர் போல் தெரிகிறது. ரசிகர்கள், சமூக வலைத்தளத்தில் புதிய திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள இவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: வெளியானது ஜனநாயகன் படத்தின் கதை.. மிரட்டும் வசனங்களை கொடுத்திருக்கும் ஹெச்.வினோத்...!