×
 

'அண்ணன பார்க்கணும்..' தவெக விழாவிற்கு அரை நிர்வாணத்தில் வந்த தொண்டர்..! விக்கித்துப்போன விழா கமிட்டி..!

அண்ணன் மானத்தை வாங்க  நீ போதும் என்பது போல் வாயை பொத்தி அழைத்து சென்ற த.வெ.கவினர்!

தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் 3 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ள நிலையில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் சாப்பாட்டுக்காக மட்டும் சுமார் ரூ.3 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விழாவில் தவெக தலைவர் விஜய் சுமார் 30 நிமிடங்கள் வரை எழுச்சியுரை ஆற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த விழாவில் மாவட்ட செயலாளர், ஒன்றிய செயளாலர், மாநகர செயலாளர்கள் மட்டும் தான் கலந்து கொள்ள உள்ளனர். அவர்களுக்கு விஜய் ஆலோசனை வழங்க உள்ளார். ஒரு இலை சாப்பாடு 3000 ரூபாய்க்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக பட்டுக்கோட்டையை சேர்ந்த தவெக நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட்ஸ் ரெசார்டில் இந்த கூட்டம் நடக்கவிருக்கிறது. இந்த ரெசார்டில் சுமார் 2,500 பேர் அமரும் வகையில் உள்ள அரங்கில் தவெக நிர்வாகிகள் அமர வைக்கப்படவுள்ளனர். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் இருந்து 2 ஆயிரம் பேருக்கு தவெக தலைமையிடம் இருந்து அழைப்பு சென்றிருக்கிறது. 

இதையும் படிங்க: இந்த ஐடியா நமக்குத் தோணலயே... திமுக, அதிமுகவை திகைக்க வைத்த தவெக... விஜய் விடுத்த அழைப்பு...! 

அதுமட்டுமல்லாமல் ரெசார்டில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்கு தவெக சார்பாக நிர்வாகிகளுக்கு பாஸ் அளிக்கப்பட்டுள்ளது. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே ரெசார்ட் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். அதேபோல் மாமல்லபுரம் அருகே நடக்கவுள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும் விஜயை வரவேற்று கட் அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

விழா ஏற்பாடுகள் ஜரூராக நடைபெற்றுக் கொண்டிருப்பதால் தற்போதே வெளியூர்களில் இருந்து நிர்வாகிகள் அந்த ரெசார்டில் வந்து குவிந்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு தற்போது மேல்சட்டை அணியாமல் பேண்ட் மட்டுமே அணிந்து கையில் தவெக கொடியுடன் போதையில் வந்த இளைஞர்  ஒருவர் திடீரென கூட்டத்திற்குள் நுழைந்து  "நான் இப்போ என் அண்ணன பாக்கனும்… நாண் இப்போது எங்க அண்ணன பார்க்கணும், கூப்பிடுங்க அவர'' என காட்டுக் கூச்சலிட்டார். இதனை கண்டு அங்கிருந்தவர்கள் திடுக்கிட்டுப்போனார்கள்.

பிறகு சமாளித்த அவர்கள், ''தம்பி உங்க அண்ணன் நாளைக்கு தான்பா வருவாரு… வா" எனக்கூறி அவரை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். அண்ணன் மானத்தை வாங்க  நீ போதும் என்பது போல் வாயை பொத்தி அழைத்து சென்ற த.வெ.கவினர்!

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து திடீர் விலகல்... தவெகவில் இணைகிறாரா ரஞ்சனா நாச்சியார்?... அவரே சொன்ன தகவல்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share