×
 

செங்கோட்டையனுக்குத் தெரியாமல் எடப்பாடியார் செய்த ஒரே ஒரு காரியம்... ஒட்டுமொத்த அப்செட்டுக்கும் காரணம் இதுவா? 

அதிமுகவில் உட்கட்சி பூசல் உச்சம் அடைந்துள்ள நிலையில், செங்கோட்டையனைச் சமாதானப்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் களமிறங்கியுள்ளனர்.

அதிமுகவில் உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அதிருப்தியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்த அழைப்பு விடுத்திருந்தாக கூறப்பட்டது. அதிமுகவில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு இருந்தவருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுக.வில் தலைமை நிலைய செயலாளர், அமைப்பு செயலாளர் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் இருந்தவர், தற்போது, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளராக உள்ளார்.  அதிமுக.வில் இவரது கட்டுப்பாட்டில் கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானிசாகர் ஆகிய 3 தொகுதிகள் உள்ளன.  


சமீபத்தில் அந்தியூர் பகுதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ ஒருவருக்கும், கோபி முன்னாள் எம்எல்ஏ ஒருவரின் மகனுக்கும் செங்கோட்டையனின் கவனத்திற்கு தெரியாமலேயே மாநில நிர்வாகிகள் பொறுப்பை எடப்பாடி பழனிச்சாமி வழங்கியதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமியின் நெருங்கிய உறவினர் ஒருவரின் பரிந்துரையின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக தெரிகிறது. 
இதனால் கடும் மன உளைச்சலுக்கும் அதிருப்திக்கும் ஆளான கே.ஏ.செங்கோட்டையன் சில தினங்களுக்கு முன்பாக அன்னூரில் நடைபெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கான பாராட்டு விழாவை புறக்கணித்தார். மேலும் சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் தவிர்த்தார். 
இதன் மூலம் அதிமுகவில் நிலவும் உட்கட்சி பூசலும், மூத்த நிர்வாகி கே.ஏ செங்கோட்டையனின் அதிருப்தியும் வெளிச்சத்திற்கு வந்து அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. 


இதனிடையே செங்கோட்டையனை சமரசம் செய்யும் முயற்சியில் எடப்பாடி தரப்பினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அவசரமாக கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கோவைக்கு புறப்பட்டு சென்ற செங்கோட்டையனை சில நிர்வாகிகள் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: செங்கோட்டையனுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம்..!அதிரடி ஆக்சன் எடுத்த போலீஸ்

இதற்கிடையே அந்தியூர் கோபிசெட்டிபாளையம் பவானிசாகர், சத்தியமங்கலம் பகுதிகளை சேர்ந்த அதிமுக நிர்வாகிகளை செங்கோட்டையன் இன்று காலை தனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார். அதிர்ச்சியில் உள்ள கே ஏ செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு விடுத்தது பெரும் பரபரப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தியது. 


கூட்டத்தில் பங்கேற்பதற்காக அந்தியூர், கோபி பகுதியைச் சேர்ந்த  ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அதிமுக பேரூர்  கிளைக் கழக செயலாளர்கள் கோபி அடுத்த குள்ளம்பாளையத்தில் செங்கோட்டையன் இல்லத்திற்கு வந்து செங்கோட்டையன் வருகைக்காக காத்திருந்தனர்.ன்இந்நிலையில் கோவையிலிருந்து இல்லத்திற்கு திரும்பிய செங்கோட்டையன் வீட்டு வாசலில் காத்திருந்த செய்தியாளர்களை சந்தித்தார் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார். 

கோவையில் கோவிலுக்கு சென்று வருவதாகவும் பொதுக்கூட்டம் தொடர்பாக அழைப்பிதழ் வழங்குவதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருப்பதாகவும் அப்போது அவர் விளக்கம் அளித்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வீட்டில் காத்திருந்த நிர்வாகிகள் ஒருவர் பின் ஒருவராக திரும்பி சென்றனர். அவசர ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த செங்கோட்டையன் திடீரென அந்தக் கூட்டத்தை ரத்து செய்துள்ளார். இதனால் நிர்வாகிகள் திரும்பிச் சென்றனர். செங்கோட்டையன் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு தாங்கள் கட்டுப்படுவதாக அவரது வீட்டிற்கு வந்திருந்த அதிமுக நிர்வாகிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 
 

இதையும் படிங்க: அதிமுக உட்கட்சி விவகாரம்... தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம்...தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share