×
 

மனைவியை பலருக்கு விருந்தாக்கிய கணவன்.. புகாரளித்த பெண்ணை ஓட்டலுக்கு அழைத்த போலீஸ்..!

மனைவியை கொடுமை படுத்தி நிர்வாணமாக வீடியோ கால் பேச வைத்து பல லட்சம் சம்பாதித்த கணவனுக்கு வலை

ஆந்திர பிரதேசம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முனிரத்தினம் ரெட்டி. கொரோனா காலத்தில் இவரது குடும்பம் நிதி நெருக்கடியில் சிக்கியது.

இதை காரணமாக காட்டி, தனது மனைவியை ஆன்லைன் செயலி மூலம் நிர்வாணமாக வீடியோ கால் பேசி பணம் சம்பாதிக்க தூண்டியுள்ளார்.

அதற்கு மனைவி மறுக்கவே, அவரை அடித்து துன்புறுத்தி பட்டினி போட்டுள்ளார். 

கணவனின் தொல்லை தாங்காமலும் இந்த விவகாரத்தை வெளியில் சொல்ல பயந்தும் முனிரத்தினம் ரெட்டியின் பேச்சை மனைவி கேட்டுள்ளார். 

இதையும் படிங்க: இது புதுசு! குடிகார கணவர்கள் துன்புறுத்தல்: மனைவிகள் எடுத்த அதிரடி முடிவு; கோவிலில், மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்

ஆன்லைன் செயலி மூலம் வரும் அழைப்புகளுக்கு நிர்வாணமாக வீடியோ கால் பேசி வந்தார்.


இதன் மூலம் சுமார் ₹18 லட்சத்திற்கு மேல் பணம் கிடைத்துள்ளது.

அதை பயன்படுத்தி அவர்கள் தங்க நகைகள் வாங்கி சொகுசாக வாழ்ந்தனர்.

இதற்கிடையே முனிரத்தினம் ரெட்டியின் மனைவியின் நிர்வாண அழைப்புகள் தொடர்பான வீடியோ காட்சிகள் வேகமாக பரவின.

மனைவிக்கு ரசிகர்கள் அதிகமானதால் பொறாமை கொண்ட முனிரத்தினம் ரெட்டி அவரை தனிமைப்படுத்தி விரட்டினார். 

கணவனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்டது குறித்து ஸ்ரீதேவி, திருப்பதி 
ஆர்.சி.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்வதற்கு முன்னதாகவே அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் ஒரு காவலர், 

இரவு ஓட்டலுக்கு வருகிறாயா என்று அவருக்கு வாட்ஸ் அப் மூலம் மெசேஜ் அனுப்பி  துன்புறுத்தி உள்ளார்.

இதை அனைத்தையும் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஆதாரத்தோடு சமர்பித்த அவர், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று வேண்டி உள்ளார்.

இதையும் படிங்க: வகுப்பறையில் மாணவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் போக்சோவில் கைது...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share