பெண் டாக்டர் பலாத்கார கொலையில் ஆயுள் தண்டனை: மேற்கு வங்காள அரசு மேல்முறையீடு; உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது
பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா விசாரணை நீதிமன்றம் குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வைத்து நேற்று தீர்ப்பு கூறியிருந்தது.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் கடும் விமர்சனம் எழுந்தது. நாட்டை உலுக்கிய இரண்டு கொலை வழக்குகளில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அவற்றில் ஒன்று மேற்கு வங்காள தலைநகர் கொல்கத்தா மருத்துவமனையில் பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கு.
மற்றொன்று கேரள மாநிலத்தில் தமிழக கன்னியாகுமரி மாவட்ட எல்லை அருகே கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் காதலனை விஷம் வைத்துக் கொலை செய்த வழக்கு
இதையும் படிங்க: கொல்கத்தா பெண் மருத்துவர் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு...
இரண்டு வழக்குகளிலும் குற்றச்சாட்டு தக்ஷ நிரூபிக்கப்பட்டு குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தண்டனை விவரம் மட்டும் நேற்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் கொல்கத்தா பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதால் நிச்சயம் தூக்கு தண்டனை கிடைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதற்கு மாறாக, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு சாகும் வரை அதாவது அவருடைய வாழ்க்கையின் கடைசி நாள் வரை சிறையில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறி ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கேரள மாநிலத்தில் நடந்த கொலை வழக்கில் கல்லூரி மாணவிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கொல்கத்தா வழக்கை பொறுத்த வரை ஏற்கனவே ஒருவரை மட்டுமே குற்றவாளியாக சிபிஐ கைது செய்து இருந்ததற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குற்றவாளியுடன் மேலும் சிலர் சேர்ந்து பெண் டாக்டரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருப்பதாக மருத்துவ கல்லூரி மாணவர்களும் டாக்டர்களும் ஏற்கனவே போராட்டங்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் குற்றவாளிக்கு வெறும் ஆயுள் தண்டனை விதித்தும், இது அரிதினும் அரிதான கொலை அல்ல என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்ததாலும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் மேற்கு வங்காள மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜியும் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இது குறித்து தனது 'எக்ஸ்' சமூக வலைத்தள பக்கத்தில் இது பற்றி கருத்து தெரிவித்திருந்த அவர் "ஆர்.ஜி.கர் மருத்துவமனை டாக்டரின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இதில், இது அரிதிலும் அரிதான கொலை வழக்கு அல்ல என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.
உண்மையில் இது மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய அரிதான வழக்கு தான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த கொடூரமான கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இது குறித்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்" எனக் கூறியிருந்தார்.
அதைத் தொடர்ந்து மாநில அரசின் தலைமை வழக்குரைஞர் கிஷோர் தத்தா கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இந்த தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி மனு தாக்கல் செய்தார். நீதிபதி தெபங்சு பஸக் தலைமையிலான அமர்வு முன்பு இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
பெண் டாக்டர் பாலியல் பலாத்கார கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்த கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கும்படி மனுவில் கோரப்பட்டு இருந்தது .
மனுவை விசாரித்த நீதிபதிகள், மாநில அரசு சார்பில் சஞ்சீவி ராய்க்கு விதிக்கப்பட்ட சாகும் வரை ஆயுள் தண்டனை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: "கிணற்றை காணோம்"பாணியில், பெண்ணின் 'கிட்னி'யை காணோம்: 'ஆபரேஷனி'ன் போது 'லவட்டிய' டாக்டர்கள், 6 பேர் சிக்கினர்