ரொம்ப ஓவரா போறீங்க ..பிரிவினைவாதத்தை தூண்டுவது யார் ? திமுகவை வறுத்தெடுத்த தமிழிசை..!
நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தி.மு.க நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா என்று வார்த்தையில் வறுத்தெடுத்துள்ளார் பாஜக தமிழிசை சௌந்தரராஜன்
கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,பா.ஜ.க மற்றும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி கிடையாது. பெண் தலைவர்கள் எப்பொழுதுமே வீதியில் இறங்கி போராட அனுமதி கிடையாது,தி.மு.க ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என எப்பொழுதோ கூறி விட்டது. ஆனால் தி.மு.க சார்ந்த கட்சிகளுக்கும் தி.மு.க வுக்கும் போராட எப்பொழுதுமே அனுமதி உண்டு. ஆனால் இன்று தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதுக்கு ஆளுநர் ஒரு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார் ஆனால் நீங்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தி.மு.க நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? இங்கு என்ன ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது , கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என்று கூறுகிறீர்கள். என்று கொந்தளித்தார்.
வேங்கை வயல் பிரச்சனையை நீங்கள் தீர்த்தீர்களா, ஆண்ட பரம்பரை என்று உங்கள் அமைச்சர் ஒருவரே ஜாதக பாகுபாடுகளோடு பேசுகிறார் அதை கண்டித்துவீர்களா, வேறுபாடையும், பிரிவினைகளையும் ஏற்படுத்துவது தி.மு.க அரசு தான் அதை கண்டிக்காதது முதலமைச்சரின் தவறு.ஆளுநர் தேசிய கீதத்திற்காக ஒரு கோரிக்கை வைத்தார் அதை நிராகரித்து விட்டு இன்று அவருக்கு எதிராகவே ஆர்ப்பாட்டம். தமிழகத்தில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருக்கிற பெண்களுக்கு எதிராக குற்றம் நடந்து கொண்டு இருப்பதை மறைப்பதற்காக இன்று ஆர்ப்பாட்டம் செய்கிறீர்கள். அதனால் தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கிறேன் இதற்கு தமிழக அரசு நிச்சயம் பதில் சொல்லியாக வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டில் யார் அந்த சார் என்று கேட்கும் போது, தமிழகத்தில் யார் அந்த பாட்டி என்றும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். பொங்கல் தொகுப்பில் ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை,அதனால் அந்தப் பாட்டி முதலமைச்சரின் மீது ஏதோ ஒரு கோபத்தில் பேசியிருக்கிறார். அதை அரசியல் சாராத ஒரு தம்பி படம் எடுக்கிறார் அவரை கைது செய்கிறீர்கள் என்றால், கருத்து சுதந்திரத்தை நீங்கள் எவ்வளவு நசுக்குகிறீர்கள்,தற்போது அந்த எதிர்ப்பை தெரிவித்த பாட்டி யார் ? என்று தேடிக் கொண்டு இருக்கிறார்கள்.எதிர்க்கட்சிகள் யார் அந்த சார் ? என்று கேட்கிறார்கள். ஆளுங்கட்சி யார் அந்த பாட்டி என்று கேட்கிறார்கள். இங்கு கருத்து சுதந்திரம் முற்றிலுமாக நசுக்கப்படுகிறது என்று தமிழிசை குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் வரம்பு மீறி ஆளுநரை பற்றி ஒரு ட்வீட் போடுகிறார். ஆனால் அண்ணா பல்கலையில் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று ஏன் இதுவரையும் வாய் திறக்கவில்லை. சகோதரி கனிமொழி சொல்கிறார் அது தான் ஏற்கனவே விசாரணை நடக்குதே, அப்புறம் ஏன் நீங்கள் போராட வேண்டும் என்று கேட்கிறார். அப்புறம் ஏன் இன்று ஆளுநருக்கு எதிராக நீங்கள் போராடுகிறீர்கள் அது தான் அதற்கான பதிலை நேற்று அவர் கூறிவிட்டார். யாரை எதிர்த்து போராட்டம் செய்கிறீர்கள், உங்கள் ஆட்சியை பற்றி தான் நீங்கள் போராட்டம் செய்கிறீர்கள். தமிழக அரசு தவறான வழியில் செல்கிறது என்பதற்கு சமீபத்திய நிகழ்வுகள் ஒரு பெரும் சான்று என்றார்.
இதையும் படிங்க: கல்வி நிதியில் பிளாக்மெயில் செய்றாங்க ..மாநில பொறுப்பில் இருக்க அக்காவுக்கு.. அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி..!