×
 

சண்முகம் மீது சந்தேகம் கொள்ளும் பரணி; சட்டையை பிடித்த முத்துப்பாண்டி - அண்ணா சீரியல் அப்டேட்!

அண்ணா சீரியலின் நேற்றைய எபிசோடில் வீரா டல்லாக வேலைக்கு கிளம்புவதை பார்த்து சண்முகம் சந்தேகமடைந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, பரணி என்னை டிராப் பண்ணு வெளியே போகணும் என்று சொல்லி ரெடியாக செல்கிறாள். பரணிக்காக காத்திருந்த சண்முகம் வேண்டா வெறுப்பாக ரெடியாகி வந்த வீராவை டிராப் செய்ய கிளம்புகிறான். 

அடுத்து பரணி வீட்டில் விசாவை தேட எங்கும் காணாததால் சண்முகம் தான் எடுத்திருப்பான் என்று சந்தேகம் கொள்கிறாள். அவனுக்கு போன் செய்ய வீராவிடம் பேசி கொண்டே செல்லும் சண்முகம், போனை எடுக்காத காரணத்தால் முத்துபாண்டியும் அப்போ அவன் தான் எடுத்து இருப்பான் என்று நம்புகிறான். மற்றவர்களும் சண்முகம் மீது சந்தேகம் கொள்கின்றனர். 

வீராவை இறக்கி விட்ட பிறகு அவனுக்கு மீண்டும் போன் வர போனை எடுத்ததும் எங்கடா போன என்று கேட்கிறாள். வீராவை டிராப் செய்ய வந்ததாக சொல்ல உடனே வீட்டிற்கு வா என்று சொல்கிறாள். சண்முகம் வீட்டிற்கு போக பரணி ஏண்டா இப்படி பண்ண என்று கேட்க ஒன்றும் புரியாமல் குழப்பம் அடைகிறான். 

இதையும் படிங்க: Anna Serial: பாக்கியத்தை ஏற்றி விடும் சௌந்தரபாண்டி! சண்முகத்துக்கு வந்த சந்தேகம்!

ஒரு கட்டத்தில் பரணி ஏண்டா விசாவை எடுத்த என்று கேட்க சண்முகம் எனக்கு தெரியாது என்று சொல்கிறான், முத்துப்பாண்டி கோபப்பட்டு சண்முகம் சட்டையை பிடிக்கிறான். இந்த சமயத்தில் கனி நிறுத்துங்க அண்ணியோட விசாவை நான் தான் எடுத்தேன் என்று கொண்டு வந்து கொடுக்கிறாள். 

இதனால் பரணி மற்றும் முத்துப்பாண்டி சண்முகம் மீது சந்தேகப்பட்டுடோமே என வருத்தம் அடைகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை தொடர்ந்து பாருங்கள்.

இதையும் படிங்க: Anna Serial: இரண்டு உசுரையும் காப்பாற்றினாளா பரணி? ஏமாறும் வீரா - அண்ணா சீரியல் அப்டேட் !

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share