சௌந்தரபாண்டியின் சதி.. சண்முகம் சமாளிக்கப்போவது எப்படி? அண்ணா சீரியல் எபிசோட் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியலின் இன்றைய அப்டேட் பற்றி பார்க்கலாம்.
நேற்றைய எபிசோடில் சண்முகம் இசக்கிக்காக விரதம் இருக்க முடிவெடுத்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சண்முகம் குளிப்பதற்காக ஏற்பாடு செய்திருக்கும் தண்ணீரில் சௌந்தரபாண்டி ஐஸ் கட்டியை கொட்டி விடுகிறார்.
அடுத்து சண்முகம் குளிக்க செல்ல சௌந்தரபாண்டி என் பேரப்பிள்ளையோட உயிர் உன்கிட்ட தான் இருக்கு, விரதத்தை ஒழுங்கா முடி என்று சொல்ல சண்முகம் அதெல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்லி செல்கிறான்.
ஒரு பாக்கெட் தண்ணீரை எடுத்து ஊற்றியதும் சண்முகத்திற்கு ரொம்ப குளிர எத்தனையோ முறை விடியற்காலையில் குளித்து இருக்கேன்.. எப்பவும் இப்படி இருந்தது இல்லையே என்ற சந்தேகம் எழுகிறது.
இதையும் படிங்க: சண்முகத்துக்கு காத்திருந்த டபுள் சந்தோஷம்.. முருகன் அருளால் நடந்தது என்ன? அண்ணா சீரியல் அப்டேட்!
கோவில் பூஜை என்பதால் இப்படி இருக்கலாம் என்று சொல்கின்றனர். அடுத்து சண்முகத்திடம் ஓகேவா என்று கேட்க அவனும் பிரச்சனை எதுவும் இல்லை என்று சொல்கிறான். சனியன், சௌந்தரபாண்டி ஆகியோர் என்ன இன்னும் ஒன்னும் ஆகல என சந்தேகம் அடைகின்றனர். இந்த சமயத்தில் சண்முகம் உடல்நிலை மோசமடைய தொடங்குகிறது.
இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
இதையும் படிங்க: பரணியின் கோபம்.. சண்முகத்தில் பிரார்த்தனை! அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்