தவெக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடத்த இடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் அக்கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு வெளியே தேடியும் இடத்தை தேர்வு செய்ய முடியாமல் திகைத்து வருகின்றனர்.
தேர்தல் ஆணையத்தின் விதிப்படி ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு கட்சியானது இரண்டு செயற்குழு கூட்டம், ஒரு பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். அதன் அடிப்படையில் தமிழக வெற்றி கழகம் இந்த 2024- 2025 ஆம் ஆண்டுக்கான செயற்குழு மற்றும் பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டிருந்தது.கட்சி தொடங்கி ஓர் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில், அதனையொட்டி ஆண்டு விழா நடத்தவும், அதனுடன் பொதுக்குழுவையும் நடத்தி முடிக்கவும் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

ஆனால், அதற்கான இடங்களை தேர்வு செய்து செய்வதில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. முதலாவதாக சென்னை பெருமாநகரத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அந்த மைதானத்தில், பொதுக்குழு, செயற்குழுவுக்கு தவெக குறித்து வைத்துள்ள அந்த தேதியில் ஏற்கனவே வேறொரு நிகழ்ச்சிக்கு முன்பதிவு செய்யப்பட்டு இருந்ததால் அங்கு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.
இதையும் படிங்க: மாட்டிக்கின்னாரு ஒருத்தரு... ஜான் ஆரோக்கியசாமியுடன் சீமான் வைத்த கூட்டு... நாதகவுக்கு தவெக வைத்த குட்டு..!
அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றி கழகம் தொடங்குவதற்கு முன்னதாக, அதிக மதிப்பெண் பெற்ற 10, 12ம் வகுப்பு மாணவர்களை அழைத்து பரிசு வழங்கும் விழா ஒன்றினை நடத்தி இருந்தார் விஜய். அந்த திருமண மண்டபத்திலும் இப்போது அனுமதி கிடைக்கப்பெறவில்லை. அதற்கான சில காரணங்களும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் இடத்தை தேர்வு செய்து அங்கே சென்று கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் அங்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தனர். ஆனால் அந்த நட்சத்திர விடுதி நிர்வாகம் இறுதி முடிவை கூறவில்லை.
செயற்குழு, பொதுக்குழு நடத்த இடங்களை தேர்வு செய்வதற்கு முன்னதாகவே 26 ஆம் தேதி நல்ல நாள் என்பதால் அப்பொழுது செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று விஜய் உத்தரவிட்டதாகவும், தேதியை செய்த தேர்வு செய்த பிறகு இடத்தை அவர்கள் தேர்வு செய்ய முயற்சி செய்வதாகவும் கூறப்படுகிறது. தேதியை உறுதி செய்த பிறகு இடத்தை தேடி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அலைந்து வருகிறார்கள் தவெக நிர்வாகிகள்.

ஏற்கனவே சென்னைக்குள் இரண்டு இடங்கள் மறுக்கப்பட்ட நிலையில், மூன்றாவதாகவே மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதிக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்தனர். அங்கேயும் சில காரணங்களால் அந்த நட்சத்திர விடுதி நிர்வாகம் உறுதி செய்யவில்லை. ஆகையால் தவெக பொதுக்குழு, செயற்குழு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே ஒரு முட்டை வீச்சுக்கே பயந்திட்டீங்களா விஜய்..? 'ஒய்'பிரிவு பாதுகாப்புக்காக கதறும் சீமான் தம்பிகள்..!